குட்டீஸ்க்கு குஷியான செய்தி... பள்ளி கோடை விடுமுறை 44 நாட்களாக அதிகரிப்பு!
நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி வேலை நாட்களை 220 நாளில் இருந்து, 210 நாட்களாக தமிழக அரசு குறைத்துள்ளதால் கூடுதலாக, 10 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.
திருநெல்வேலி : பள்ளி வேலை நாட்கள் 220 நாட்களில் இருந்து 210 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு 44 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. மேலும் ஏப்ரல் 21ம் தேதிக்கு பிறகு விடுமுறை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், ஏப்ரல், 20க்குள் தேர்வுகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், கோடை விடுமுறை, 44 நாட்களாக நீட்டிக்கப்படுகிறது. தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 1ல் துவங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறுகிறது. மார்ச், 7ல் துவங்கிய, பிளஸ் 1 தேர்வு, ஏப்ரல் 16ல் முடிகிறது. மார்ச் 16ல் துவங்கவுள்ள, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்ரல் 20ல் முடிகிறது. பொது தேர்வு அல்லாத மற்ற, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஏப்ரல் 20க்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 21 முதல், பள்ளிக்கு விடுமுறை விடப்படுகிறது. அடுத்த கல்வியாண்டு, ஜூன் 1ம் தேதி தொடங்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும் அன்று வார இறுதி நாளாக இருப்பதால், சனி, ஞாயிறு சேர்த்து, கோடை விடுமுறையை, ஜூன், 3 வரை நீட்டிக்க, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி அளித்ததும், முறையான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.
வழக்கமாக ஜூன், 1ம் தேதி, வார வேலைநாளாக இருந்தால், அன்றே பள்ளிகள் திறக்கப்படும். இந்த முறை வார இறுதி நாளாக இருப்பதால், சனி, ஞாயிறை சேர்த்து, ஜூன், 3 வரை விடுமுறையை நீட்டிக்கப்பட உள்ளது. வழக்கமாக பள்ளி மாணவர்களுக்கு, 31 நாட்கள் தான் விடுமுறை கிடைக்கும். இந்தாண்டு, 44 நாட்கள் வரை விடுமுறை கிடைக்க உள்ளது. கடந்த ஆண்டு வரை, தொடக்க பள்ளிகள், ஏப்ரல், 30 வரை இயங்கின. நடப்பு கல்வி ஆண்டில், தொடக்க பள்ளி வேலை நாட்களை, 220 நாளில் இருந்து, 210 நாட்களாக, தமிழக அரசு குறைத்துள்ளது. இதனால், கூடுதலாக, 10 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications