For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இனி ஆண்டுதோறும் பஸ் கட்டணம் மாற்றம்... தனியார் பஸ்களுக்கும் கட்டண உயர்வு பொருந்தும்... தமிழக அரசு

இனி ஆண்டுதோறும் பஸ் கட்டணம் மாற்றியமைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: இனி ஆண்டுதோறும் பஸ் கட்டணம் மாற்றியமைக்கப்படும் என்றும் தனியார் பஸ்களுக்கும் இந்த கட்டண உயர்வு பொருந்தும் என்றும் தமிழக அரசு தனது அறிக்கையில் கூறியுள்ளது.

ஊதிய உயர்வு, பராமரிப்பு மற்றும் பழுது கட்டணம்,எரிபொருள் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களுக்காக தமிழகத்தில் பேருந்து கட்டணம் இன்று முதல் உயர்த்தப்படுகிறது. இதை திரும்ப பெற கோரி மக்களும், அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

TN Government says that bus fare will be revised every year

ஆங்காங்கே மறியல் போராட்டங்களும் நடைபெறுகின்றன. இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் எரிப்பொருள் விலையேற்றம், ஊதிய உயர்வு, பழுது மற்றும் பராமரிப்பு கட்டணம் போன்றவற்றை உள்ளடக்கிய அளவீட்டின்படி பேருந்து கட்டணம் இனி ஆண்டுதோறும் மாற்றி அமைக்கப்படும்.

எனினும் அரசு உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினால் எப்போது வேண்டுமானாலும் கட்டணங்கள் மாற்றியமைக்கப்படும். கட்டண உயர்வு தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும்.

ரூ.1000 பயண அட்டையை பிப்ரவரி 15-ஆம் தேதி வரை கூடுதல் கட்டணமின்றி பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு நாள் பயண சீட்டுக்கு (ஒன் டே பாஸ்) விரைவில் விலை நிர்ணயிக்கப்படும் என்று அரசாணையில் தகவல் தெரிவித்துள்ளது.

English summary
Tamilnadu Government in its GO says that every year bus fare will be revised. This bus fare hike suitable for private bus too.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X