ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் ஸ்டாலின் சந்திப்பு!
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் அழைப்பை ஏற்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலையில் அவரை சந்திக்கிறார்.
Recommended Video

சென்னை : தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திமுக செயல்தலைவர் ஸ்டாலினை ஆளுநர் மாளிகையில் சந்தித்து வருகிறார்.
உச்சநீதிமன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்னும் 2 நாட்களே உள்ளன. ஆனால் இதுவரையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுத்ததாக தெரியவில்லை. இந்நிலையில் மார்ச் 30ம் தேதி திமுக செயல்குழு அவசர கூட்டமானது அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 29 வரை பொருத்திருந்து பார்க்கலாம் என்று தமிழக அரசும் கூறிவிட்டது. இந்நிலையில் எதிர்க்கட்சி என்ற முறையில் அரசு காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஒருவேளை மார்ச் 29ம் தேதிக்குப் பின்னர் தமிழகத்தில் காவிரி பிரச்னை பூதாகரமாக வெடிக்கும் என்பதாலோ என்னவோ திடீரென இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க அழைப்பு விடுத்தார்.
இதன்படி தற்போது சென்னை கிண்டியிலுள்ள ராஜ்பவனில் ஸ்டாலின், ஆளுநர் சந்திப்பு நடக்கிறது. இந்த சந்திப்பின் போது காவிரி மேலாண்மை வாரியம், பல்கலைக்கழக முறைகேடுகள் உள்ளிட்ட தமிழக பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. அண்மையில் தமிழக சட்டபல்கலைக்கழக துணை வேந்தராக சாஸ்திரி என்ற ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications