3 மாவட்ட தொழில் நிறுவனங்களுக்கு இன்று பொங்கல் விடுமுறை.. தமிழக அரசு அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் உள்ள 3 மாவட்டங்களில் இன்று பொங்கல் விடுமுறை என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

தமிழகம் முழுக்க பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகள் இப்போதே தொடங்கிவிட்டது. பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கிவிட்டார்கள்.

TN Govt. announces today as the holiday for 3 district workers

கூட்டநெரிசலை குறைக்கும் பொருட்டு ஏற்கனவே பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் மாணவர்கள் நேற்று ஊருக்கு திரும்பிவிட்டார்கள்.

இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட இன்று விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பு நேற்று இரவே வழங்கப்பட்டு உள்ளது.

பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல வசதியாக இன்று விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. இதனால் கூட்ட நெரிசலை குறைக்க முடியும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamil Nadu Government announces today as the holiday for 3 district workers. Chennai, Kanchipuram and Thiruvallur district government workers gets holiday today in order to go to their home town for Pongal festival.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற