புதுச்சேரி அருகே தமிழக அரசுப் பேருந்து தீவைத்து எரிப்பு

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுவை அருகே தமிழக அரசுப் பேருந்து தீவைத்து எரிக்கப்பட்டது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்திலும் புதுவையிலும் கூட தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. பல இடங்களில் பஸ்கள் கொளுத்தப்பட்டுள்ளன.

TN govt bus torched near Puducherry

இந்த நிலையில் புதுச்சேரி அருகே தமிழக அரசுப் பேருந்துக்குத் தீவைக்கப்பட்டுள்ளது. புதுவையிலிருந்து இன்று மாலை தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. கனகசெட்டிக்குளம் பகுதியில் பஸ் வந்தபோது சிலர் வந்து பஸ்சை மறித்து நிறுத்தினர். பின்னர் பஸ்சில் இருந்த பயணிகளை கீழே இறக்கி விட்டனர்.

அனைவரையும் இறக்கி விட்ட பின்னர் பேருந்துக்குத் தீவைக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினர் விரைந்து வந்தனர். தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

தீவிபத்த நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+