For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரிசி உற்பத்தி குறித்து பொய்யான அறிக்கை வெளியிட்ட தமிழக அரசு: முக ஸ்டாலின் கண்டனம்

அரிசி உற்பத்தி குறித்து பொய்யான அறிக்கை வெளியிட்ட தமிழக அரசு க்கு முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

சென்னை: அரிசி உற்பத்தியைக் குறைத்து அதிமுக அரசு பொய்யான தகவல்களை வெளியிட்டு மக்களை ஏமாற்றி வருகிறது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசி சார்பில், அரிசி உற்பத்தி குறித்து வெளியிடப்பட்ட புள்ளி விபரங்களுக்கும், மத்திய அரசின் ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரத்திற்கும் இடையே அதிக வேறுபாடுகள் காணப்படுவது குறித்து தமிழக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பியுள்ளன.

இதுகுறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தமிழக அரசு உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 பம்பர் அறுவடை தகவல்

பம்பர் அறுவடை தகவல்

அந்த அறிக்கையில், தமிழ்நாட்டில் அரிசி உற்பத்தி குறித்து மாநில அரசு தரும் புள்ளி விவரங்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவைதானா என்ற பலத்த சந்தேகம் பல தரப்பினரிடமும் ஏற்பட்டிருக்கிறது. காரணம், அரிசி உற்பத்தி குறித்து மாநில அரசு தந்துள்ள புள்ளி விவரத்திற்கும், "ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா" வெளியிட்டுள்ள புள்ளி விவரத்திற்கும் இடையிலான பெருமளவு வேறுபாடுகள் தான். கடந்த 2013-14 மற்றும் 2014-15ஆம் ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் நெல் விளைச்சலில் ‘பம்பர் அறுவடை' நடந்ததாக ஜெயலலிதா தலைமையிலிருந்த அ.தி.மு.க. அரசு ஊரெங்கும் தம்பட்டம் அடித்துக்கொண்டது.

 தமிழக அரசின் புள்ளிவிபரம்

தமிழக அரசின் புள்ளிவிபரம்

அரசின் புள்ளி விவரப்படி, 2013-14-ம் ஆண்டில் அரிசி உற்பத்தி 71.15 லட்சம் டன்களாகும். அதுபோல 2014-15-ம் ஆண்டில் அரிசி உற்பத்தி 79.49 லட்சம் டன்கள் என தமிழக அரசு புள்ளிவிவரம் தந்துள்ளது. அதே நேரத்தில், இந்த இரண்டு ஆண்டு காலத்திற்கான அரிசி உற்பத்தி குறித்து, மத்திய ரிசர்வ் வங்கி மே 2018-ல் வெளியிட்டுள்ள இந்திய மாநிலங்கள் குறித்த புள்ளி விவரங்கள் தொடர்பான கையேட்டில் (Handbook of Statistics on Indian States) 2013-14-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் அரிசி உற்பத்தி 53.49 லட்சம் டன்கள் என்றும், 2014-15-ம் ஆண்டில் அரிசி உற்பத்தி 57.27 லட்சம் டன்கள் என்றும் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 பொய்யான தகவல்

பொய்யான தகவல்

இதனடிப்படையில் பார்க்கும்போது, 2013-14ஆம் ஆண்டின் அரிசி உற்பத்தியை ஏறத்தாழ 18 லட்சம் டன்களும், 2014-15ஆம் ஆண்டின் அரிசி உற்பத்தியை ஏறத்தாழ 22 லட்சம் டன்கள் அளவுக்கும் தமிழ்நாடு அரசின் புள்ளி விவரம் செயற்கையாக உயர்த்திக் காட்டியிருப்பது தெரியவருகிறது. மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் துறை தந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில், தனது கையேட்டில் தகவல்கள் பதிப்பிக்கப்பட்டிருப்பதாக ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா தெரிவிக்கின்ற நிலையில், மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு தந்துள்ள புள்ளிவிவரங்கள் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறிக்குள்ளாகிறது.

 சரியான அணுகுமுறை இல்லை

சரியான அணுகுமுறை இல்லை

காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக ஆட்சியில் அதன் பிற்போக்குத்தனமான அணுகுமுறையினால், விவசாயிகளின் தற்கொலையும் பட்டினிச் சாவுகளும் அதிகரித்து வரும் நிலையில், அரிசி உற்பத்தியில் ‘பம்பர் சாதனை' படைத்ததாகக் காட்டிக்கொண்டு, உண்மையை மறைக்க இப்படி இட்டுக்கட்டி பொய்யான புள்ளி விவரங்களை ஆட்சியாளர்கள் வழங்குகிறார்களோ என்ற ஐயமும் எழுகிறது.அ.தி.மு.க. ஆட்சியில் சட்டமன்றம் தொடங்கி மக்கள் மன்றங்கள் வரை சரியான புள்ளிவிவரங்கள் தரப்படுவதில்லை.

 மக்களை ஏமாற்றும் அரசு

மக்களை ஏமாற்றும் அரசு

சில தருணங்களில், நீதிமன்றத்திலேயே திசைதிருப்பக்கூடிய வகையில் தவறான புள்ளிவிவரங்களை அளித்து குட்டுப்பட்டதுடன், அதன் காரணமாக தமிழகத்தின் உரிமைகள் பறிபோனதும் உண்டு. முழுமையான விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் எனப் பல முறை வலியுறுத்தியபோதும், எந்த ஒரு துறை சார்பாகவும் வெள்ளை அறிக்கை வெளியிட அ.தி.மு.க. அரசு தயாராக இல்லை. அதற்கு மாறாக, அதிமுக ஆட்சியாளர்கள் தருகின்ற கருப்புப் புள்ளிவிவரங்கள் அனைத்தும் அரிசி உற்பத்தி போல, மூட்டை மூட்டையாகப் பொய் சொல்லும் வகையில்தான் அமைந்துள்ளனவோ? மக்களை ஏமாற்றுவதற்காகவே புள்ளி விவரங்களை ஆட்சியாளர்கள் வெளியிடுகிறார்களோ?

 மக்கள் பாடம் புகட்டுவார்கள்

மக்கள் பாடம் புகட்டுவார்கள்

ஜனநாயக மாண்புகளைக் குழிதோண்டிப் புதைக்கும் அதிமுக ஆட்சியாளர்கள், தங்களை ஆட்சியில் அமர்த்திய மக்களிடம் பொய்யையும் புரட்டையும் புளுகையும் காட்டி, இதுபோல தொடர்ந்து ஏமாற்ற நினைத்தால், அந்த மக்களே சரியான நேரத்தில் தக்க பாடம் புகட்டுவார்கள் என எச்சரிப்பதுடன், அரிசி உற்பத்தி தொடர்பான முழுமையான உண்மையான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
TN Govt is giving false Statistics to Publis says Stalin. DMK Leader Stalin says that TN Govt Immediately need to support White Report on Rice Prodcution.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X