ஜெ. சிகிச்சை விவரங்கள் தொடர்பான அறிக்கையை இன்று வெளியிடுகிறது தமிழக அரசு!
சென்னை: மரணமடைந்த ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் தொடர்பான அறிக்கையை தமிழக அரசு இன்று மாலை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயலலிதாவுக்கு அப்பல்லோவில் அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் தொடர்பாக நாள்தோறும் புது புது அணுகுண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஓபிஎஸ் அணியின் குற்றச்சாட்டுகள் படுபயங்கரமாக இருக்கின்றன.

ஜெயலலிதா அடித்தே கொலை செய்யப்பட்டார்; கொலை குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம் என பேசி வருகின்றனர் ஓபிஎஸ் அனியினர். இதற்கு ஈடுகொடுக்காமல் தனிநபர்களை வசைபாடி வருகிறது சசிகலா அணி.
இந்த நிலையில் ஏதேனும் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டிய நெருக்கடியில் தமிழக அரசு உள்ளது. இதனால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள், சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கைகளை தமிழக அரசு கேட்டு வாங்கியுள்ளது.
இந்த அறிக்கைகளை இணைத்து தமிழக அரசு ஒரு விரிவான அறிக்கையை தயாரித்து வருவதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது இன்று மாலை வெளியிடப்படலாம் எனவும் கூறப்படுகிறது.