தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலும் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
சென்னை: தமிழகம் மற்றம் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழைபெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரவு திடீரென, இடி, மின்னலுடன் சிறிது நேரம் மழை பெய்தது. இதன் காரணமாக சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில்,
வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.
சென்னையைப் பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதியில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications