For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பட்ஜெட் மானியக் கோரிக்கை: எந்த நாளில் எந்த துறை மீது விவாதம் நடக்கும் - அட்டவணை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: 2016-17 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதம் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

வெள்ளி, சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு ஜூலை 25ம் தேதி சட்டசபை மீண்டும் கூடுகிறது. மறைந்த உறுப்பினர்களுக்கு 25ம்தேதி இரங்கல் தெரிவிக்கப்பட்டு, பின்னர் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கும். 28ம் தேதி வரை விவாதம் நடைபெற்று, 29-ம் தேதி பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலுரை இடம்பெறும். அதன்பின்னர் 30, 31 ஆகிய விடுமுறை நாட்களைத் தொடர்ந்து ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்து மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும். அதுபற்றிய விவரம் :

TN revised budget 2016 Time table for discussion

ஆகஸ்ட் 1 - கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை

ஆகஸ்ட் 2 - வனம் (சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள், சட்டத்துறை

ஆகஸ்ட் 3- எரிசக்தி துறை , மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை,

ஆகஸ்ட் 4 - நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை (கட்டடங்கள், பாசனம்)

ஆகஸ்ட் 5 - நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை.

ஆகஸ்ட் 6 - அரசு விடுமுறை

ஆகஸ்ட் 7 - அரசு விடுமுறை

ஆகஸ்ட் 8 - மீன்வளம், பால்வளம் (கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை)

ஆகஸ்ட் 9 - உயர்கல்வித் துறை, பள்ளிக் கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை

ஆகஸ்ட் 10 - சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை

ஆகஸ்ட் 11 - தொழில்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை

ஆகஸ்ட் 12 - சுற்றுச்சூழல், (சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை), செய்தி மற்றும் விளம்பரம் (தமிழ் வளர்ச்சி மறறும் செய்தித்துறை), எழுதுபொருள் மற்றும் அச்சு (தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை)

ஆகஸ்ட் 13 - அரசு விடுமுறை

ஆகஸ்ட் 14 - அரசு விடுமுறை

ஆகஸ்ட் 15 - சுதந்திர தினம்-அரசு விடுமுறை

ஆகஸ்ட் 16 - கைத்தறி மற்றும் துணிநூல் (கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை), தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை

ஆகஸ்ட் 17 - வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை

ஆகஸ்ட் 18 - மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை

ஆகஸ்ட் 19 - வேளாண்மைத் துறை, கால்நடை பராமரிப்பு, (கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை)

ஆகஸ்ட் 20 - அரசு விடுமுறை

ஆகஸ்ட் 21 - அரசு விடுமுறை

ஆகஸ்ட் 22 - வருவாய்த்துறை

ஆகஸ்ட் 23- வணிக வரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப் பதிவு (வணிக வரி மற்றும் பதிவுத்துறை)

ஆகஸ்ட் 24 - சுற்றுலா-கலை மற்றும் பண்பாடு (சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை), கதர் கிராமத்தொழில்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் (கைத்தறி, கைத்திறன், துணி நூல் மற்றும் கதர்த்துறை)

ஆகஸ்ட் 25 - கிருஷ்ண ஜெயந்தி - அரசு விடுமுறை

ஆகஸ்ட் 26 - பேரவைக் கூட்டம் இல்லை.

ஆகஸ்ட் 27 - அரசு விடுமுறை

ஆகஸ்ட் 28 - அரசு விடுமுறை

ஆகஸ்ட் 29 - இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள்-நிர்வாகம் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை), போக்குவரத்துத் துறை.

ஆகஸ்ட் 30 - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை

ஆகஸ்ட் 31 - தமிழ் வளர்ச்சி (தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை), இந்து சமய அறநிலையத்துறை (சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை)

செப்டம்பர் 1 - காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை)

செப்டம்பர் 2 - பொதுத்துறை, மாநிலச் சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை, திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும், அரசினர் சட்ட முன்வடிவுகள்-ஆய்வு செய்தலும் நிறைவேற்றுதலும், ஏனைய அலுவல்கள்.

English summary
Here is the list of Tamil Nadu assembly revised budget discussion time table from August 1 to September 2.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X