For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்டாலின் தாக்கப்பட்டதற்கு கண்டனம் - சபாநாயகர் அலுவலகம் மீது கல்வீச்சு

திருப்பூர் அவினாசியில் சபாநாயகர் தனபால் அலுவலகத்தின் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்கியுள்ளனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. திமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து அனைவரும் குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர். ஸ்டாலின் மீது தாக்குதல் நடைபெற்றது. அவர் கிழிந்த சட்டையுடன் வெளியேற்றப்பட்டார். இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் மறியல் செய்து வருகின்றனர். அவினாசியில் சபாநாயகர் தனபால் அலுவலகம் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்கியுள்ளனர்.

TN speaker Dhanapal office pelted

சட்டசபையில் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் பல கடைகள் மீது கல்வீசி தாக்கப்பட்டன. இதனையடுத்து பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர், ஈரோடு, கடலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மறியலில் ஈடுபட்டனர். சபாநாயகர் தனபாலுக்கு எதிராக பலரும் முழக்கமிட்டனர்.

TN speaker Dhanapal office pelted

இதனிடையே திருப்பூர் மாவட்டம் அவினாசியில் சபாநாயகர் தனபால் அலுவலகம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மர்ம நபர்கள் சபாநாயகர் தனபால் அலுவலகம் தாக்கப்பட்டது. சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்வீச்சு நடைபெற்றுள்ளது. இதில் அலுவலக கண்ணாடிகள் உடைந்தன. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

English summary
An unidentified men stone pelted in speaker Dhanapal office in Avinasi near Tirupur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X