For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எம்.ஜி.ஆரின் செல்லப்பிள்ளை.. ஜெ.வின் மாஜி ரைட் ஹேன்ட்... காங். தலைவராக உயர்ந்த திருநாவுக்கரசர்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜனார்தன திவேதி இதனை அறிவித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 4 மாதங்களுக்கு முன் அப்பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து அப்பதவிக்கு யாரும் நியமிக்கப்படாமல் காலியாக இருந்து வந்தது. இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக திருநாவுக்கரசரை காங்கிரஸ் மேலிடம் நியமித்துள்ளது.

சு. திருநாவுக்கரசர் புதுக்கோட்டை மாவட்டம் தீயத்தூர் கிராமத்தில் 1949ல் பிறந்தார். முதுகலைகளில் கலை மற்றும் சட்ட இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.
எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இளம் அமைச்சராக இடம் பெற்று எம்.ஜி. ஆரின் மனதில் நிரந்தர இடம் பிடித்தவர் திருநாவுக்கரசர். திறமையான அமைச்சராக அறியப்பட்ட திருநாவுக்கரசருக்குப் பலமுகங்கள். அரசியல்வாதியாக, திரைப்பட விநியோகஸ்தராக, நடிகராகவும் கூட அசத்தியவர் திருநாவுக்கரசர்.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் அதிமுக உடைந்து ஜெயலலிதா தலைமையில் தனி அணி உருவானபோது ஜெயலலிதாவின் தலைமையை ஏற்றவர் திருநாவுக்கரசர். ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏக்களை ஆம்னி பஸ்சில் ஏற்றி ஊர் ஊராக இவரும், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனும் அழைத்துச் சென்றது வரலாறு.

ஜெயலலிதாவின் குட்புக்

ஜெயலலிதாவின் குட்புக்

ஜெயலலிதாவின் நட்பு வட்டாரத்தில் முக்கிய இடத்தில் இருந்த திருநாவுக்கரசர் பின்னர் படிப்படியாக அதிலிருந்து விலக்கப்பட்டார். ஒரு கட்டத்தி்ல் ஓரம் கட்டப்பட்டு கட்சியை விட்டும் நீக்கப்பட்டார். பின்னர் எம்.ஜி.ஆர். அதிமுகவைத் தொடங்கி நடத்தி வந்தார். பிறகு மீண்டும் அதிமுகவில் இணைந்தார் அதை யாருமே அப்போது எதிர்பார்க்கவில்லை. ஆனால் சேர்ந்த வேகத்தி்ல் மீண்டும் அதிலிருந்து வெளியேறி தனிக் கட்சி கண்டார்.

பெயர் மாற்றம்

பெயர் மாற்றம்

2002ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைவதற்கு முன்பு திருநாவுக்கரசு என்ற தனது பெயரை திருநாவுக்கரசர் என்று மாற்றிக் கொண்டார். பாஜகவில் இணைந்த அவர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் இணை அமைச்சராக இடம் பெற்றார். ராஜ்யசபா உறுப்பினராக பதவி வகித்தார். பின்னர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

அறந்தாங்கியின் ஆஸ்தான எம்.எல்.ஏ

அறந்தாங்கியின் ஆஸ்தான எம்.எல்.ஏ

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டசபைத் தொகுதி தான் திருநாவுக்கரசரின் ஆஸ்தான தொகுதியாக விளங்கியது. அத்தொகுதியில் தொடர்ந்து பலமுறை வென்று சாதனை படைத்தார். அங்கு அவர் அல்லது அவர் நிறுத்தும் ஆட்கள்தான் வெல்ல முடியும் என்ற நிலை இருந்தது. 1977-ல் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சு. திருநாவுக்கரசர் சட்டப்பேரவைத் துணைத் தலைவரானார். தொடர்ந்து, 1980, 1984 ஆகிய தேர்தல்களில் அதிமுக சார்பிலும், வெற்றி பெற்று எம்.ஜி.ஆர் அமைச்சரவையில். அதன் பின் தொழில் துறை அமைச்சர், வீட்டு வசதி துறை அமைச்சர் என்று பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு அமைச்சர் பதவி வகித்தவர்.

தனிக்கட்சி தொடங்கிய திருநாவுக்கரசர்

தனிக்கட்சி தொடங்கிய திருநாவுக்கரசர்

1989 ஆம் ஆண்டில் அதிமுக (ஜெ) சார்பிலும் போட்டியிட்ட திருநாவுக்கரசர் வெற்றி பெற்றார். இதன் பின்னர், அண்ணா புரட்சித் தலைவர் தமிழக முன்னேற்றக் கழகம் என்ற தனிக் கட்சியைத் தொடங்கிய திருநாவுக்கரசர் 1991 ஆம் ஆண்டிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கட்சியைக் கலைத்த திருநாவுக்கரசர், 1996 ஆம் ஆண்டில் மீண்டும் அதிமுக சார்பில் போட்டியிட்டு தொடர்ந்து ஆறாவது முறையாக வெற்றி பெற்றார்.

தனிப்பட்ட செல்வாக்கு

தனிப்பட்ட செல்வாக்கு

திருநாவுக்கரசரின் தொடர் வெற்றிக்கு அவரது தனிப்பட்ட செல்வாக்கும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கிய அவர், 1999 ஆம் ஆண்டில் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மத்திய இணை அமைச்சரானார். எனவே, 2001 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அவரது ஆதரவாளர் ப. அரசனை எம்.ஜி.ஆர். அதிமுக சார்பில் அத்தொகுதியில் வேட்பாளராக நிறுத்தினார் திருநாவுக்கரசர். இந்த முறையும் திருநாவுக்கரசரின் செல்வாக்கால் ப. அரசன் வெற்றி பெற்றார். ஆனால், 2006 ஆம் ஆண்டில் அதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட குழ. காத்தமுத்து தோல்வியைத் தழுவியதுடன் நான்காம் இடத்தைத்தான் பெற முடிந்தது.

ராமநாதபுரம் எம்.பி தொகுதி

ராமநாதபுரம் எம்.பி தொகுதி

புதுக்கோட்டை எம்.பி. தொகுதி கலைக்கப்பட்டு அதில் இருந்த அறந்தாங்கி, ராமநாதபுரத்துடன் இணைக்கப்பட்டது. இதனையடுத்து 2009 ஆம் ஆண்டில் அறந்தாங்கி சட்டசபைத் தொகுதியை உள்ளடக்கிய ராமநாதபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார் திருநாவுக்கரசர். இதில், தனது சொந்த செல்வாக்கு உள்ள அறந்தாங்கி தொகுதியில் 30,000 வாக்குகள் பெற்று இரண்டாமிடத்தைத்தான் பெற்றார் அவர்.

கட்சி மேலிடத்தில் செல்வாக்கு

கட்சி மேலிடத்தில் செல்வாக்கு

பாஜகவில் இருந்து விலகிய திருநாவுக்கரசர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, 2011ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அறந்தாங்கி தொகுதியில் கை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2014ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார். ராமநாதபுரத்துக்கு ராகுல் காந்தியை பிரச்சாரம் செய்ய அழைத்துவந்து கட்சி மேலிடத்தில் தனக்கு இருக்கும் செல்வாக்கை திருநாவுக்கரசர் நிரூபித்தார்.

பல கட்சிகள் பல சின்னங்கள்

பல கட்சிகள் பல சின்னங்கள்

மத்திய, மாநில அமைச்சராக இருந்த சு.திருநாவுக்கரசர் இரட்டை இலை, சேவல், குடை, மாம்பழம், மோதிரம், தாமரை, கை ஆகிய 7 சின்னங்களில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் தொண்டர்களின் இல்ல விழாக்கள் மட்டும் இன்றி யார் கூப்பிட்டாலும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பவர். சுருக்கமாகச் சொன்னால் எந்த கோஷ்டியையும் சாராமல் மக்கள் செல்வாக்குடன் திகழ்பவர். இதனால்தான் கட்சியையும் தாண்டி, தமிழக அரசியல் தலைவர்கள் அனைவராலும் விரும்பக் கூடியவராக திருநாவுக்கரசர் உள்ளார்.

English summary
Thirunavukkarasar born 7 May 1949 He is a secretary of All India Congress Committee (AICC) of Indian National Congress. His introduction to politics in 1977 was facilitated by former chief minister of Tamil Nadu Puratchi Thalaivar MGR.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X