இரவு 9 மணியில் இருந்து... நள்ளிரவை தாண்டியும் நீடித்த சேசிங்.. ரவுடிகள் கொத்தாக சிக்கியது எப்படி?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சென்னையில் துப்பாக்கி முனையில் 69 ரவுடிகள் கைது- வீடியோ

  சென்னை: ரவுடிகளை சினிமா பாணியில் சுற்றி வளைத்து பிடித்தது எப்படி என போலீசார் விளக்கமளித்துள்ளனர்.

  சென்னை பூந்தமல்லியை அடுத்த மலையம்பாக்கத்தில் நேற்றிரவு 76 ரவுடிகள் கையும் களவுமாக பிடித்து கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த பயங்கர ஆயுதங்கள் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

  கைது செய்யப்பட்ட ரவுடிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ரவுடிகளிடம் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை ஊடகத்துக்கு காட்டிய போலீசார் ரவுடிளை பிடித்தது எப்படி என விளக்கமளித்தனர்.

  ரகசியமாக சென்ற போலீஸ்

  ரகசியமாக சென்ற போலீஸ்

  ரவுடிகளை பிடித்தது எப்படி என சென்னை போலீஸ் உதவி ஆணையர் கண்ணன் விளக்கமளித்தார். அப்போது போலீஸ் வாகனத்தில் சென்றால் ரவுடிகள் தப்பி விடுவார்கள் என்பதால் தனியார் வாகனத்தில் ரகசியமாக, ரவுடிகள் கூடியிருந்த இடத்திற்கு சென்றதாக அவர்கள் தெரிவித்தனர்.

  ஆபரேஷன் தொடக்கம்

  ஆபரேஷன் தொடக்கம்

  மேலும் இரவு 9 மணிக்கே இந்த ஆபரேஷனை தொடங்கிவிட்டதாகவும் சென்னை காவல் உதவி ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட ரவுடிகளில் 8 பேர் கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

  சிலர் தப்பியோட்டம்

  சிலர் தப்பியோட்டம்

  ரவுடிகளை போலவே மாற்று உடையில் சென்று பிடித்ததாகவும் போலீசார் தெரிவித்தார். போலீசாரை கண்டதும் சில ரவுடிகள் தப்பியோடிவிட்டனர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

  ஏராளமான ரவுடிகள்

  ஏராளமான ரவுடிகள்

  ரவுடிகளை பிடிக்க மலையம்பாக்கம் கிராமமக்கள் பெரிதும் உதவியதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் சென்னையில் ஏராளமான ரவுடிகள் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

  பினு, கனகு, விக்கி

  பினு, கனகு, விக்கி

  பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வந்த அனைவரையும் துப்பாக்கி முனையில் பிடித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். ஆனாலும் பினு, கனகு, விக்கி ஆகிய மூன்று பேர் மட்டும் தப்பிவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

  ஏ கிளாஸ் ரவுடிகள்

  ஏ கிளாஸ் ரவுடிகள்

  ரவுடிகளை ஏ, பி, சி என தரம் பிரித்து வைத்துள்ளதாகவும் அவர்கள் கூறினர். தப்பிய பினு உள்ளிட்டோர் ஏ கிளாஸ் ரவுடிகள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Chennai police assistant commissioner has met press today after arresting the rowdy gang. He has said to catch the rowdies they arrived the area in a private vehicle.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற