For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பி.எச் பாண்டியன் இத்தனை நாட்கள் மவுனம் காத்தது ஏன்? - டி.ராஜேந்தர்

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது மவுனம் காத்த பிஎச் பாண்டியன் இப்போது வாய் திறப்பது ஏன் என்று டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் இத்தனை நாட்களாக அமைதியாக இருந்து விட்டு திடீரென ஜெயலலிதா மரணம் பற்றி வாய் திறப்பது ஏன் என்று லதிமுக தலைவர் டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெயலலிதா தள்ளிவிடப்பட்டு காயம்பட்ட நிலையில் சிகிக்சைக்கு அனுமதிக்கப்பட்டதாக பிஎச் பாண்டியன் கூறிய நிலையில் டி.ராஜேந்தர் இந்த கேள்வி கேட்டுள்ளார்.

அதுகுறித்து ஏன் சசிகலா தரப்பு விளக்கம் அளிக்கவில்லை என்று கேட்காத டி.ராஜேந்தர், ஏன் பிஎச் பாண்டியன் இப்போது கேட்கிறார் என்று கேட்டுள்ளார்.

 சசிகலா தரப்பில் பேச்சு!

சசிகலா தரப்பில் பேச்சு!

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், அதிமுகவின் ஓபிஎஸ் அணியினர் எழுப்பிய சந்தேகங்களுக்கு பதிலடி தரும் வகையில் பல்வேறு கேள்விகளை முன்வைத்தார்.

ஏன் இத்தனை நாள் மவுனம்

ஏன் இத்தனை நாள் மவுனம்

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் பற்றி பி.எச். பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். கிட்டத்தட்ட 137 நாட்கள் மவுனம் காத்த பி.எச் பாண்டியன் திடீர் என்று ஜெயலலிதா மரணம் பற்றி சந்தேகம் எழுப்புவது ஏன் என்று கேட்டுள்ளார்.

அப்போதெல்லாம் ஏன் கேட்கவில்லை

அப்போதெல்லாம் ஏன் கேட்கவில்லை

அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த 75 நாட்களும், ஜெயலலிதா மரணமடைந்து 90 நாட்களும் கடந்து விட்ட நிலையில் இப்போது சந்தேகம் எழுப்பியது ஏன் என்று கேட்டுள்ளார் டி.ராஜேந்தர்.

இப்போது இவர் கேட்பது ஏன்

இப்போது இவர் கேட்பது ஏன்

ஜெயலலிதா தள்ளிவிடப்பட்டார் என்றும் சிசிடிவி கேமராக்கள் பற்றியும் சந்தேகம் எழுப்பிய பி.எச் பாண்டியன், குற்றவாளிகளை தாங்கள் நெருங்கிவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ராஜேந்தர் கேள்வி எழுப்பாமல், ஏன் இப்ப கேட்கிறீர்கள் என்ற ரீதியில் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
LDMK leader T Rajendhar has slammed PH Pandian for his charge against Sasikala in Jayalalitha death issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X