புதுச்சேரியை ஸ்தம்பிக்க வைத்த காமன்வெல்த் எதிர்ப்பு பந்த்!
புதுச்சேரி: காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாவிலிருந்து யாரும் பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி நேற்று நடந்த வர்த்தகர்கள் முழு கடையடைப்புப் போராட்டத்தால் புதுச்சேரி கிட்டத்தட்ட ஸ்தம்பித்துப் போனது.
தமிழகத்தை விட புதுவையில் மக்களும் சரி, வியாபாரிகளும் சரி, இந்த போராட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து ஸ்தம்பிக்க வைத்து விட்டனர்.
புதுச்சேரியில் இயல்பு நிலை கிட்டத்தட்ட முழுமையாகவே பாதிக்கப்பட்டிருந்ததைக் காண முடிந்ததாக அங்கிருந்து வந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.

கடைகள் மூடல்
புதுச்சேரியில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. திறந்திருந்த கடைகளைப் பார்ப்பது மிக மிக அரிதாக இருந்தது.

தொழில்நிறுவனங்கள் மூடல்
அதேபோல தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்களையும் மூடி போராட்டத்தில் பங்கேற்றனர்.

தனியார் பஸ்கள் ஓடவில்லை
அரசு பஸ்கள் மட்டுமே ஓரளவுக்கு ஓடின. தனியார் பஸ்கள் முற்றிலும் ஓடவில்லை.

டீக்கடை கூட இல்லை
ஒரு டீக்கடை கூட புதுச்சேரியில் நேற்று திறக்கப்படவில்லை. அனைவரும் கடைகளை மூடி விட்டு போராட்டத்தில் பங்கேற்றனர்.

பீச்சில் சுண்டல் விற்கக் கூட ஆள் இல்லை
வழக்கமாக கூட்டமாக காணப்படும் கடற்கரையில் நேற்று சுண்டல் விற்கும் சிறார்களைக் கூட காண முடியவில்லை. அப்படி ஒரு கட்டுக்கோப்பான ஒத்துழைப்பை அனைவரும் நேற்று கொடுத்தனர்.

முழுமையான பந்த்
மொத்தத்தில் நேற்று புதுச்சேரியில் நடந்த பந்த் முழுமையாக இருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications