அரசு பஸ்ஸுக்குள் ஜோடி ஜோடியா மாணவ மாணவிகள்! அதிரடியாக உள்ளே நுழைந்து அட்வைஸ் செய்த பெண் எஸ்ஐ
திருப்பத்தூர்: அரசு பேருந்தில் மாணவ மாணவிகள் சிலர் ஜோடி, ஜோடியாக அமர்ந்திருந்த நிலையில், அதிரடியாக உள்ளே நுழைந்த போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் அட்வைஸ் செய்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது. பெண் எஸ்ஐ செய்தது தவறு என்று ஒரு தரப்பும், அவர் சரியாக செயல்பட்டதாக இன்னொரு தரப்பும் சொல்வதால் விவாதம் வலுத்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு பேருந்தில் கல்லூரிக்கு செல்லும் மாணவிகளிடம் சில மாணவர்கள் சில்மிஷத்தில் ஈடுபடுவதாக புகார் எழுந்ததாக கூறப்படுகிறது. காவல்துறைக்கு தகவல் கிடைத்த நிலையில், இது தொடர்பாக போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் திடீரென சம்பந்தப்பட்ட பேருந்துக்குள் ஏறினார்.

அவர், மாணவர்களுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார். பேருந்தில் மாணவர்களிடம் அவர் பேசியதாவது, "இந்த பஸ்ல லேடிஸ் காலேஜ் போற பொண்ணுங்க இருக்காங்க. ஆனால் அவங்ககிட்ட தேவையில்லாமா பேசுறது, சீண்டுறது அப்படினு ரொம்ப அட்டகாசம் நடக்குதுன்னு கம்ளைன்ட் வந்திருக்கு. தொட்டு பேசுறது, கிண்டலடிக்கிறது, பார்வையால ஜாடை செய்யுறது என எல்லாத்துக்கும் கேஸ் இருக்கு" என்று எச்சரித்த அவர்.. ஜோடியாக அமர்ந்திருந்தவர்களை பார்த்து சில கேள்விகளை எழுப்பினார்.
தன்னுடைய வாழ்க்கையில் படிப்பை தாமதமாக முடித்ததால் ஏற்பட்ட இழப்புகளையும் அந்த பெண் சிறப்பு எஸ்ஐ கூறி, காதலால், வாழ்க்கையில் இழந்த பிற விஷயங்களை ஒருபோதும் பெற முடியாது என்று அறிவுறுத்தினார்.கடைசியாக, "இத்தனை சீட் காலியாக இருக்கும்போது கடைசி சீட்டில் ஏன் வந்து உட்கார்ந்தீங்க? இதென்ன கல்லூரி பஸ்ஸா? காதல் பஸ்ஸா? என்ன அட்டகாசம் இதெல்லாம்? பாப்பா இந்த ஒரு முறை நான் சொல்லிட்டுபோறேன். இன்னொரு நாள் எப்போ வருவேன்னு தெரியாது. வந்து உங்க ஐடி எல்லாம் எடுத்துட்டுபோய்... காலேஜில பேட் கான்டெக்ட்'னு (Conduct Certificate) ஒரேயொரு முத்திரை குத்திட்டாங்கனா உன் லைஃப் ஆவ்ளோதான்.

இதனால பாதிக்கப்படுறது உன்னைவிட உன்னுடைய பெத்தவங்கதான். ஏன்னா அவங்கதானே கஷ்டப்பட்டு ஃபீஸ் கட்றாங்க. அவங்க காசுலதான சாப்புடுறீங்க. இன்னைக்கு டிபன்பாக்ஸ் எடுத்துட்டு வந்தவங்க எல்லாம் சொல்லுங்க, நான் செஞ்சு எடுத்துட்டு வந்தேன்னு, சொலுங்க பாப்போம்" என்று எச்சரிக்கும் தொனியில் பேசினார்.
இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வரும் நிலையில், உதவி ஆய்வாளரின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பை தெரிவித்துள்ளனர். ஆனால் ஜோடியாக உட்கார்ந்திருப்பதாலேயே அவர்களை பிரிந்து உட்கார சொல்ல கூடாது, யார் கூட உட்கார வேண்டும் என்பது மாணவ, மாணவிகள் விருப்பம் என்றும் மற்றொரு தரப்பினர் வாதிட்டு வருகிறார்கள். மேலும், எஸ்ஐ பேசுவது கல்லூரி மாணவர்களை மிரட்டும் தொனியில் இருக்கிறது என்றும் விமர்சித்துள்ளனர்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications