தமிழகத்தில்தான் பேருந்து கட்டணம் குறைவாம் சொல்கிறார் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

கரூர்: இந்தியாவிலேயே தமிழகத்தில் பேருந்து கட்டணம் மிகக் குறைவு. விரைவில் 2000 புதிய பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜய பாஸ்கர் இந்தியவிலேயே தமிழ்நாட்டில் தான் பேருந்து கட்டணம் மிகக் குறைவாக உள்ளது. அண்டை மாநிலங்களில் ஒரு கிலோ மீட்டருக்கு 62 பைசா கட்டணம் வசூலிக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் வெறும் 48 பைசா தான் வசூலிக்கப்படுகிறது என்றார்.

Transport minister Vijaya baskar feel proud about transport department

மேலும், தமிழ்நாட்டில் மொத்தம் 22,300 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் அதில் 1,45,000 தொழிலாளர்கள் பணியற்றுவதாகவும் தெரிவித்த அமைச்சர், குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு சேவை செய்யும் துறை போக்குவரத்துத் துறை என பெருமிதமாகக் கூறினார். மேலும், விரைவில் தமிழ்நாட்டில் 2000 புதிய பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்தார்.

Minister Vijaya baskar appeared in Income Tax Office-Oneindia Tamil

போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு பணிக்கொடை, சொஸைட்டி லோன் உள்ளிட்ட எந்த பலனும் கிடைக்கவில்லை என கோரி அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In all over India only in Taminadu bus fare is very low told minister Vijayabaskar
Please Wait while comments are loading...