1058 விரிவுரையாளர் காலிப் பணியிடங்கள்... ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

By: Sivasankari
Subscribe to Oneindia Tamil

சென்னை : ஆசிரியர் தேர்வு வாரியம், அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் 1058 விரிவுரையாளர் (பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பாடங்கள்) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்துள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 07.07.2017ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

விரிவுரையாளர் பணிக்கான அறிவிப்பு 16.06.2017ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது. 1058 விரிவுரையாளருக்கான எழுத்துத் தேர்வு 13.08.2017ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TRB Recruitment 2017 Apply Online 1058 Lecturers Vacancies

இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே 17.06.2017 முதல் 07.07.2017 வரை விண்ணப்பிக்க முடியும்.

பணி அறிவிப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் (அரசு வேலை)

பணியின் தன்மை - விரிவுரையாளர்

பணியிடம் - தமிழ்நாடு

காலியிடம் : 1058

கல்வித் தகுதி - பதவிக்கு தகுந்தாற் போல் பொறியியல் பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பொறியியல் அல்லாத பாடங்களுக்கு கல்வித் தகுதி - பதவிக்கு தகுந்தாற் போல் முதுகலைப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் - ரூ. 15600 - 39100/- தர ஊதியம், ரூ. 5400/- மாதம்

வயது வரம்வு - 01/07/2017 அன்று 57 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்தெடுக்கப்படும் முறை - எழுத்துத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் பட்டியலின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு அழைக்கப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்

விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் - 17.06.2017 முதல் 07.07.2017ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

எழுத்துத் தேர்வு - 13.08.2017

மேலும் தகவல் அறிந்து கொள்வதற்கு https://goo.gl/H1apSd என்ற இணையதள முகவரியை அணுகவும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Teachers Recruitment Board, Tamil Nadu released new notification on their official website for the recruitment of 1058 (one thousand and fifty eight) vacancies for Lecturers (Engineering / Non Engineering).
Please Wait while comments are loading...