For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேட்பாளர்கள் பட்டியலில் தினகரனுக்கு 33வது இடம்... டிடிவிக்கு வைக்கப்பட்டிருக்கும் இன்னொரு செக் என்ன

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் டிடிவி. தினகரனுக்கு 33வது இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    ஆர்கே நகரில் 59 பேர் போட்டி...மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமே பயன்படுத்தப்படுகிறது!- வீடியோ

    சென்னை: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் டிடிவி. தினகரனுக்கு 33வது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதோடு வேட்பாளர்கள் வரிசையில் டிடிவி. தினகரனுக்கு முன்னர் கே. தினகரன், ஜி. தினகரன், எம். தினகரன் என்று 3 தினகரன்கள் உள்ளனர்.

    ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் ஒரு வழியாக சின்னத்துடன் நேற்று இரவு வெளியிடப்பட்டது. அதிமுகவின் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னம் தரக்கூடாது என்று தினகரன் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. தினகரன் கேட்ட தொப்பி, கிரிக்கெட் மட்டை, விசில் என்று 3 சின்னமுமே அவருக்கு கிடைக்கவில்லை.

    இறுதியாக தேர்தல் ஆணையம் அளித்த சின்னங்களில் இருந்து பிரஷர் குக்கர் சின்னத்தை தேர்ந்தெடுத்தார் டிடிவி. தினகரன். இரவோடு இரவாக பிரஷர் குக்கரும் கையுமாக பிரச்சாரத்தில் இறங்கினார் டிடிவி தினகரன்.

    அதிக சுயேச்சை வேட்பளார்கள்

    அதிக சுயேச்சை வேட்பளார்கள்

    எந்த இடைத்தேர்தலிலும் இல்லாத விதமாக ஆர்கே நகர் இடைத்தேர்தலில் 145 பேர் மனு தாக்கல் செய்தனர். 73 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 72 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. இவர்களில் 13 பேர் மனுக்களை திரும்பப்பெற்ற நிலையில், இறுதிக் களத்தில் 59 வேட்பாளர்கள் உள்ளனர்.

    40 சுயேச்சை வேட்பாளர்கள்

    40 சுயேச்சை வேட்பாளர்கள்

    அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் இல்லாமல் சுமார் 40 வேட்பாளர்கள் சுயேச்சையாக களமிறங்குகின்றனர். ஜெயலலிதா போட்டியிட்ட இந்த தொகுதியில் ஒரே ஒரு பெண் வேட்பாளர் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

    தினகரனுக்கு எத்தனையாவது இடம்?

    தினகரனுக்கு எத்தனையாவது இடம்?

    ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட போது அதிமுக அம்மா அணி சார்பில் களமிறங்கிய சசிகலா அணியின் டிடிவி. தினகரன், இந்த முறை சுயேச்சையாக களமிறங்குகிறார். டிடிவி. தினகரனுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 33வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பெட்டியில் முதலில் பகுஜன் சமாஜ் கட்சி, இரண்டாவது இடத்தில் பாஜக, 3வது இடத்தில் அதிமுக மற்றும் நான்காவது இடத்தில் திமுக வேட்பாளருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.

    டிடிவி தினகரனுக்கு முன்னர் 3 தினகரன்

    டிடிவி. தினகரனுக்கு முன்னர் இருக்கும் 3 சுயேச்சை வேட்பாளர்களும் தினகரன் என்ற பெயரிலேயே உள்ளவர்கள். 30வது இடத்தில் பெட்டி சின்னத்தில் சுயேச்சை வேட்பாளர் கே. தினகரனும், 31வது இடத்தில் ஆட்டோ சின்னத்தில் ஜி. தினகரனும், 32வது இடத்தில் எம். தினகரனும் உள்ளனர்.

    தினகரனுக்கு ஒரே ஒரு நல்ல விஷயம்

    தினகரனுக்கு ஒரே ஒரு நல்ல விஷயம்

    எனினும் டிடிவி. தினகரனுக்கு ஒரே ஒரு நல்ல விஷயம் உள்ளது. ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்கள் என்ற ரீதியில், 4 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் மூன்றாவது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முதல் இடத்தில் தினகரனுக்கு வாக்களிக்கும் பொத்தான் அமைக்கப்படும் என்று தெரிகிறது. முதல் 2 மின்னணு வாக்குப் பெட்டிகளை விட்டுவிட்டு 3வது பெட்டியில் இருக்கும் முதல் சின்னத்தில் தான் வாக்களித்தால் தான் தினகரனுக்கு ஓட்டுகள் விழும்.

    English summary
    Election comission released the list of candidates series in ballot box of these TTV Dinakaran is placed 33rd place and before him 3 candidates where also Dinakaran.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X