விடாது விரட்டும் ஐடி ரெய்டு- பிரத்யங்கிரா தேவியிடம் சரணடைந்த தினகரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஐடி ரெய்டு- பிரத்யங்கிரா தேவியிடம் சரணடைந்த தினகரன்- வீடியோ

சென்னை: சசிகலா, டிடிவி தினகரன் உறவினர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நீடித்து வருகிறது. ரெய்டு நடந்தாலும் பயப்பட மாட்டோம் என்று கூறிக்கொண்டே செஞ்சி அருகே உள்ள பிரத்தியங்கிரா தேவியை வழிபட்டு திரும்பியுள்ளார் டிடிவி தினகரன்.

கடந்த வியாழக்கிழமை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சசிகலா குடும்பத்தார் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்களில் தொடர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இந்த ரெய்டுக்கு எங்க வீட்டில் உள்ள பச்சைப்புள்ள முதல் வயதான எங்க அப்பா வரை யாரும் பயப்பட மாட்டோம் என்று தில்லு துரையாக பேட்டி தருகிறார் டிடிவி தினகரன்.

ரெய்டே நடக்கலையே

ரெய்டே நடக்கலையே

எங்கெங்கோ ரெய்டு நடக்கிறது என் வீட்டில் ரெய்டு நடக்கவேயில்லை. நான் பூஜை செய்கிறேன் என்று கோ பூஜை செய்து விட்டு பேட்டி கொடுத்தார் தினகரன். தன்னுடைய பண்ணை வீட்டில் சாணியும், உரமும்தான் கிடைக்கும் என்றார்.

உள்ளுக்குள் உதறல்

உள்ளுக்குள் உதறல்

வியாழக்கிழமை தொடங்கி ரெய்டு விடாது நீடிக்கிறது. ஜெயலலிதா எழுதிய உயிலையும், அவரது சிகிச்சை வீடியோவையும் தேடுவதாக தகவல் வெளியாகி வருகிறது. டிடிவி தினகரனுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமலேயே பேட்டி தருகிறார்.

இளவரசியின் வாரிசுகள்

இளவரசியின் வாரிசுகள்

சசிகலா பரோலில் வந்த உடன் தங்கிய இளவரசி மகள் கிருஷ்ணபிரியா வீடும், விவேக் ஜெயராமன் வீடும் ரெய்டு வளையத்தில் வசமாக சிக்கியுள்ளது. அங்குதான் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கோவிலுக்கு சென்ற தினகரன்

கோவிலுக்கு சென்ற தினகரன்

இந்த சூழ்நிலையில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே செம்மேடு கிராமத்தில் உள்ள பிரத்யங்கிரா தேவி கோயிலுக்கு தன் மனைவி ,மகளுடன் தினகரன் சென்று தரிசனம் செய்துள்ளார்.

பேசாத தினகரன்

பேசாத தினகரன்

சிறப்பு பூஜை முடிந்ததும் டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது மனைவி, மகள் ஆகியோர் கோவிலை 1 முறை சுற்றிவந்தனர். சுமார் 15 நிமிடம் கோவிலில் இருந்துவிட்டு யாருடனும் பேசாமல் அவர்கள் காரில் சென்னை புறப்பட்டு சென்றனர். இந்த பிரத்தியங்கரா தேவி கோவில் டி.டி.வி.தினகரனுக்கு சொந்தமானதாகும்.

மிளகாய் ஹோமம்

மிளகாய் ஹோமம்

கடந்த ஜூன் மாதம் 13ஆம் தேதி செவ்வாய்கிழமையன்று பிரத்யங்கிரா கோவிலுக்கு சென்று மிளகாய் யாகம் நடத்தினார் தினகரன். பிரத்யங்கிரா தேவிக்குச் சிறப்பு பூஜைகள், மிளகாய் போட்டு சுமார் ஒருமணி நேரம் ஹோமம் செய்தார்.

அம்மன் வழிபாடு ஏன்

அம்மன் வழிபாடு ஏன்

பிரத்யங்கிரா தேவியை வழிபட்டு யாகம் நடத்தினால் வெற்றி கிட்டும். மிளகாய் யாகம் வளர்த்தால் எதிரி அழிந்து போவார்கள் என்பது நம்பிக்கை. இப்போது தினகரன் கோவிலுக்கு சென்று வழிபட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பயந்துட்டியா குமாரு? என்று கேட்கின்றனர் அவரது எதிர்ப்பாளர்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran offer prayer for Prathyangira Devi temple near Tiruvannamalai district.
Please Wait while comments are loading...