நான் கொள்ளையடித்ததை ஜெயக்குமாரிடம் தான் கொடுத்து வைத்துள்ளேன்.. தினகரன் தடாலடி
தான் கொள்ளையடித்த 20 ஆயிரம் கோடி ரூபாய் சொத்தை அமைச்சர் ஜெயக்குமாரிடம் தான் கொடுத்து வைத்துள்ளேன் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.
சென்னை: தான் கொள்ளையடித்த 20 ஆயிரம் கோடி ரூபாய் சொத்தை அமைச்சர் ஜெயக்குமாரிடம் தான் கொடுத்து வைத்துள்ளேன் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.
அண்மையில் சென்னை புளியந்தோப்பில் நடைபெற்ற அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் டிடிவி தினகரனுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார்.
தினகரன் ஜெயிலுக்கு போனாரே எதற்காக சென்றார் எனகேள்வி எழுப்பினார். தானும் சிறைக்கு சென்றுள்ளதாக கூறிய ஜெயக்குமார், தான் ஜெயிலுக்கு சென்றது அரசியல் ரீதியாக ஜெயலலிதாவுக்கு சென்றதாக கூறினார்.

திருடனுக்கும் தியாகிகளுக்கும்
ஆனால் தினகரன் ஜெயிலுக்கு சென்றது எதற்கு? என்றம் அவர் கேள்வி எழுப்பினார். திருடனுக்கும், தியாகிகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது என கடுமையாக சாடினார்.

ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல்
1991- ம் ஆண்டுக்கு முன்பாக அந்த குடும்பத்தினரின் சொத்து எவ்வளவு? என்றும் இன்று எவ்வளவு சொத்து இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பிய அவர் கிட்டத்தட்ட ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் அந்த குடும்பத்தின் சொத்து இருக்கிறது.

ஜெயலலிதாவுக்கு தெரியாமல்
ஜெயலலிதாவுக்கு தெரியாமல் தமிழ்நாட்டையே சூறையாடிவிட்டார்கள் என்றும் கொள்ளையடித்து கோடி கோடியாக குவித்த பணத்தில் அ.தி.மு.க.வை கைப்பற்றி விடலாம் எண்ணுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

ஜெயக்குமாரிடம் கொடுத்து வைத்துள்ளேன்
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரனிடம் ஜெயக்குமார் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த டிடிவி தினகரன் கொள்ளையடித்த 20 ஆயிரம் கோடியை ஜெயக்குமாரிடம் தான் கொடுத்து வைத்துள்ளேன் என்றார்.

தாய் போல் இருந்தவருக்கே துரோகம்
அதனை கொடுக்காமல் ஏமாற்றுவதற்கு தான் ஜெயக்குமார் இப்படி பபூன் மாதிரி தினமும் பேசிக்கொண்டு இருக்கிறார் என்றும் அவர் கூறினார். இவர்கள் தாய் போல் இருந்த பொதுச்செயலாளருக்கே துரோகம் செய்தவர்கள் என்றும் அவர்களை தூக்கி எறியக்கூடிய காலம் நெருங்கி கொண்டிருக்கிறது என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications