நாங்க மட்டும் சும்மாவா.. சாப்பாட்ட காட்டிட்டு போங்க.. தினகரன் ஆதரவாளர்கள் அலம்பல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  நாங்க மட்டும் சும்மாவா.. சாப்பாட்ட காட்டிட்டு போங்க.. தினகரன் ஆதரவாளர்கள் அலம்பல்- வீடியோ

  சென்னை: வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு வாங்கி செல்லப்பட்ட உணவை தினகரனின் ஆதரவாளர்கள் சோதனை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

  சசிகலாவின் குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் காலை முதல் அதிரடி ஆய்வு நடத்தி வருகின்றனர். சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான நிறுவனங்களிலும் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

  இந்த சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் பாஜக தான் இந்த சோதனைக்கு காரணம் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை மகாலிங்கப்புரத்தில் உள்ள ஜெயா டிவியின் சிஇஓ விவேக் வீட்டிலும் காலை முதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

  உணவை சோதித்த ஆதரவாளர்கள்

  உணவை சோதித்த ஆதரவாளர்கள்

  இந்நிலையில் சோதனையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு ஊழியர் ஒருவர் மதிய உணவு வாங்கிச் சென்றார். இதனைக் கண்ட தினகரனின் ஆதரவாளர்கள் அதிகாரிகளுக்கு வாங்கி செல்லப்பட்ட உணவை சோதனை செய்தனர்.

  வெளியில் ஆதரவாளர்கள் சோதனை

  வெளியில் ஆதரவாளர்கள் சோதனை

  அதிகாரிகள் வீட்டிற்குள் சோதனை செய்து கொண்டிருந்தபோது தினகரன் ஆதரவாளர்கள் வெளியில் சோதனை நடத்தினர். இதனை வெளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

  வைத்துவிட்டு எடுத்தால் உண்டு

  வைத்துவிட்டு எடுத்தால் உண்டு

  காலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் தனது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தவில்லை என்றார். மேலும் தனது பண்ணை வீட்டில் சோதனை நடக்கிறது என்ற அவர் அங்கு உர மூட்டையை தவிர வேறு ஏதும் கிடைக்காது என்றார். மேலும் அதிகாரிகளே வைத்துவிட்டு எடுத்தால்தான் உண்டு என்றார்.

  சந்தேகத்தால் சோதனை

  சந்தேகத்தால் சோதனை

  அதனை மனதில் வைத்துக்கொண்டு தினகரனின் ஆதரவாளர்கள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கொண்டு சென்ற உணவை சோதித்துள்ளனர். உணவு பார்சல்களோடு அதிகாரிகள் ஆவணங்களை சேர்க்கலாம் என்ற சந்தேகத்தில் தினகரன் ஆதரவாளர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதிகாரிகளின் உணவை தினகரனின் ஆதரவாளர்கள் சோதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  TTV Dinakaran's supporters tested the food that was brought to the income tax authorities. Dinakaran's supporters have been involved in this operation in suspicion that authorities can add documents with food parcels

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற