அதிமுகவில் இருந்து நீக்கி விளையாடும் தினகரன், எடப்பாடி பழனிச்சாமி

Posted By:
Subscribe to Oneindia Tamil
நீக்கி, சேர்த்து விளையாடும் தினகரன், எடப்பாடி பழனிச்சாமி-வீடியோ

சென்னை: அதிமுக தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்குவதாகவும், அந்தப் பொறுப்பில் பாப்பிரெட்டிபட்டி தொகுதி எம்.எல்.ஏ. பழனியப்பனை நியமிப்பதாகவும் தினகரன் அறிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமியும், டிடிவி தினகரனும் மாறி மாறி நீக்கி, சேர்த்து விளையாடி வருகின்றனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது அணிகள் இணைந்து, சென்னையை அடுத்த வானகரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டினர்.

TTV Dinakaran sacks EPS Key post

இந்தக் கூட்டத்தில், சசிகலாவின் நியமனம் ரத்து, பொதுச் செயலாளருக்கான அதிகாரங்களை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு அளிப்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தினகரன் நியமனம் செல்லாது எனவும், அவரது அறிவிப்புகள் அனைத்து செல்லுபடியாகாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கட்சியில் உறுப்பினர்களை நீக்க, சேர்க்கும் அதிகாரம் ஒ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டுமே உண்டு என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்குவதாகவும், அந்தப் பொறுப்பில் பாப்பிரெட்டிபட்டி தொகுதி எம்.எல்.ஏ. பழனியப்பனை நியமிப்பதாகவும் தினகரன் அறிவித்துள்ளார்.

அதேபோல, கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து திண்டுக்கல் சீனிவாசனை நீக்கி, அந்தப் பொறுப்புக்கு தனது ஆதரவாளரான, தஞ்சாவூர் தொகுதி எம்.எல்.ஏ., ரெங்கசாமியை நியமிப்பதாகவும் தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சேலம் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீக்கப்படுவதாக தினகரன் சமீபத்தில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dhinakarann released a paper from the party letter head stating that he has removed CM E Palaniswamy from the Party Key post.
Please Wait while comments are loading...