சட்டசபையில் என்னை பார்க்கும் போது பழனிசாமிக்கு கூவத்தூர் ஞாபகம் வரும்... தினகரன் அட்டாக்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சட்டசபையில் எனக்கு எந்த இருக்கை ஒதுக்கினாலும் அதைப் பற்றி கவலைப்படவில்லை, நிச்சயமாக என்னை பார்க்கும் போது முதல்வர் பழனிசாமிக்கு கூவத்தூரில் நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வரும் என்று டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தொலைக்காட்சி ஒன்றிற்கு டிடிவி. தினகரன் அளித்துள்ள நேர்காணலில் கூறியுள்ளதாவது : ஆட்சியாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் ஆர்கே நகர் தேர்தலுக்குப் பின்னர் பலம் இல்லாதவர்களாக இருக்கின்றனர். அவர்கள் பார்ப்பதற்குத் தான் பயில்வான் போல இருப்பார்கள். முதல்வர், துணை முதல்வர் என்று சொல்லிக்கொள்பவர்கள் பதற்றத்தில் என்னவெல்லாம் சொல்லி வருகிறார்கள் என்பதை மக்கள் அனைவரும் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.

திமுக வாக்குவங்கியை திருப்பி விட்டது என்று தோல்விக்கு இவர்கள் காரணம் சொல்கின்றனர். ஹவாலா முறையில் நான் பணம் விநியோகித்ததாக சொல்கிறார்கள், அதிமுகவினர் தான் ஒரு வாக்காளருக்கு ரூ. 6 ஆயிரம் என 120 கோடி ரூபாயை தந்தார்கள். அதில் பாதியை அவர்களே எடுத்துக்கொண்டு சென்றுவிட்டதால் கடைசி நேரத்தில் போலீஸ் உதவியுடன் சுமார் 2 லட்சம் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்தார்கள்.

ஓட்டுக்காக கடன் சொல்ல முடியுமா?

ஓட்டுக்காக கடன் சொல்ல முடியுமா?

கடன் சொல்லி யாரிடமாவது ஓட்டு வாங்க முடியுமா, அல்லது நான் பணம் கொடுப்பேன் என்று நம்பும் மக்களிடம் நான் ஏன் கடன் சொல்ல வேண்டும் என்பது தான் எதார்த்த உண்மை. அதைவிட்டு விட்டு ஹவாலா பணம் என சொல்வதெல்லாம் வெட்டிப் பேச்சுகள்.

ஓபிஎஸ் தியானம் செய்யப் போய்விட்டாரா?

ஓபிஎஸ் தியானம் செய்யப் போய்விட்டாரா?

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் ஓ.பன்னீர்செல்வம் நான் எல்கேஜி, அவர் சீனியர் என்றெல்லாம் இப்போது சொல்கிறார். அசந்த நேரத்தில் வெற்றி பெற்றுவிட்டேன் என்றெல்லாம் சொல்கிறார் ஏன் தேர்தல் நடக்கும் போது இவர் தியானம் செய்ய போய்விட்டாரா? இவர்கள் வயசான காலத்தில் மதுசூதனனை வேட்பாளராக போட்டுவிட்டு அங்கும் இங்கும் தூக்கிக் கொண்டு அலைந்தார்கள்.

அதிகாரத்தால் ஓட்டு வாங்க முடியாது

அதிகாரத்தால் ஓட்டு வாங்க முடியாது

ஆட்சி, அதிகாரம், பணபலம் இருந்தால் தேர்தலில் ஓட்டு வாங்கிவிட முடியாது. ஏனெனில் எவ்வளவு பணம் கொடுத்தாலும், மக்களுக்கு தெளிவாக தெரியும். இவர்கள் கொடுக்கும் பணம் முதல்வர் பழனிசாமி தோட்டத்தை விற்று கொண்டு வந்த பணமா, அல்லது ஓ.பன்னீர்செல்வம் ஊரில் மாங்காய் குத்தகையை விட்டுவிட்டு வந்து பணம் கொடுத்தார்கள். ஜெயலலிதாவை ஏமாற்றி இவர்கள் கொள்ளையடித்த பணம் தான் இவை. 6 ஆண்டாக ஜெயலலிதாவை ஏமாற்றியும், ஓராண்டாக தன்னிச்சையாக செயல்பட்டும் சேர்த்து வைத்த பணம் தான் இது வாங்கிக் கொள்ளுங்கள் என்று தான் நான் பிரச்சாரத்தின் போதே மக்கள் மத்தியில் சொன்னேன்.

கூவத்தூர் நியாபகம் வருமில்லையா?

கூவத்தூர் நியாபகம் வருமில்லையா?

சட்டசபையில் என்னை நேருக்கு நேர் சந்திக்க முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பயப்படுகிறார்கள். சட்டசபையில் எனக்கு கடைசி இருக்கை கூட தரப்படலாம். சட்டசபையில் என்னை நேருக்கு நேர் பார்த்தால் கூவத்தூர் நியாபகம் பழனிசாமிக்கு வருமில்லையா. தங்கமணி, வீரமணி உள்ளிட்ட 10 அமைச்சர்கள் சுவர் ஏறி குதிக்க இருந்தார்கள், இதனை பார்த்து தனக்கு ஆதரவு தரமாட்டார்கள் என்று பழனிசாமியே சொல்லி இருக்கிறாரே. அவர்களை எல்லாம் தடுத்து நிறுத்தியது யார் என்ற வரலாறு அனைவருக்குமே தெரியும்.

எங்கே வேண்டுமானாலும் இருக்கை போடட்டும்

எங்கே வேண்டுமானாலும் இருக்கை போடட்டும்

ஓ.பன்னீர்செல்வம் என்னைவிட வயதில் எனக்கு சீனியர் தான். 1999ல் எம்பி வேட்பாளராக வந்த போது அவர் கிளைச் செயலாளராக இருந்தார், அதன் பிறகு எப்படி வளர்ச்சி பெற்றார். ஜெயலலிதா சிறைக்கு செல்ல நேரிட்ட போது யாரால் முதல்வரானார் என்பதெல்லாம் உலகத்திற்கே தெரியும்.

எங்கு உட்காருகிறோம் என்பதெல்லாம் முக்கியம் இல்லை, நான் எப்படி செயல்படப் போகிறேன் என்பது தான் முக்கியம்.

திமுக சரியாக செயல்படவில்லை

திமுக சரியாக செயல்படவில்லை

திமுக அசால்ட்டா இருந்ததால் தான் மதுசூதனன் இரண்டாவது இடத்திற்கு வந்தார். திமுகவிற்கு 1980 முதல் 40 ஆயிரம் வாக்குகள் இருக்கிறது. ஆனால் அவர்கள் சரியாக செயல்படாததால் தான் அதிமுக இரண்டாவது இடத்திற்கு வந்தது. திமுக இரண்டாவது இடத்திற்கு வரும் என்று தான் நான் நினைத்தேன், அதிமுக டெபாசிட் இழக்கும் என்று தான் எதிர்பார்த்தேன். இப்படி மோசமான நிலைக்கு திமுக போகும் என்று நான் நினைக்கவில்லை.

சிறப்பாக செயல்படுவேன்

சிறப்பாக செயல்படுவேன்

ஒரு தினகரனையே இவர்களால் சமாளிக்க முடியவில்லை, ஆயிரம் தினகரன்கள் வந்தால் இவர்கள் கதி என்னவாகும் என நினைத்துப் பாருங்கள். அரசியல் வரலாற்றிலேயே தினகரன் எப்படி இடைத்தேர்தலில் சுயேச்சையாக வெற்றி பெற்றேனோ, அது போல என்னுடைய செயல்பாடும் சட்டசபையில் தனி சிறப்பானதாக இருக்கும் என்று தினகரன் கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV. Dinakaran says he won't bother about where they allot seat for him at assembly but will act with the duties of MLA, and also says When CM Palanisamy meet me face to face in assembly definitely the Koovathur days will remind him.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற