குறுக்கு வழியில் இரட்டை இலையைப் பெற பார்க்கிறது ஈ.பி.எஸ்- ஓ.பி.எஸ் தரப்பு.. தினகரன்

Subscribe to Oneindia Tamil

திருச்சி : இரட்டை இலையைப் பெற தாங்கள் சட்டபூர்வமாகப் போராடி வருவதாக அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார்.

இன்று திருச்சியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். அப்போது இரட்டை இலை வழக்கு விசாரணைக்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார்.

TTV Dinakaran says EPS and OPS team submitted forged documents in election commission

தாங்கள் இரட்டை இலையைப் பெற சட்டப்பூர்வமாகப் போராடி வருவதாகவும் ஆனால், ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தரப்பு குறுக்கு வழியில் இரட்டை இலையைப் பெற்று கட்சியைக் கைப்பற்ற நினைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தங்களது தரப்பு வாதத்தில் தேவையான அனைத்து வித ஆதாரங்களைக் கொடுத்தும், பதிலளித்தும் இருப்பதாகவும் ஆனால், எதிர்த்தரப்பு போலியான ஆதாரங்களை சமர்பித்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் அந்த ஆவணங்களை சரிபார்க்கும் என்று அவர் தெரிவித்தார். மேலும், இந்த ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் ஆகியோரை வீட்டிற்கு அனுப்பவதே தங்களின் முதல் பணி என்றும் அவர் குறிப்பிட்டார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran says that EPS and OPS team submitted forged documents in front of Election Commission. Soon they will get caught.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற