ஆர்.கே.நகரில் திமுக சரியாக தேர்தல் பணியாற்றவில்லை.. சொல்வது டிடிவி தினகரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.கே.நகரில் திமுகவினர் சோம்பேறித்தனமாக செயல்பட்டனர் என்று சுயேச்சை எம்.எல்.ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது திமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.கே.நகரில் சமீபத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன், வெற்றி பெற்றார். 2வது இடத்தை அதிமுக வேட்பாளர் மதுசூதனன் பிடித்தார்.

TTV Dinakaran says that the DMK was lazy in RK Nagar

ஆனால் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் டெபாசிட் இழந்தார். இதுகுறித்து தினகரன் நிருபர்களிடம் இன்று கூறுகையில், திமுக இறங்கி வேலை பார்த்திருந்தால், அதிமுகவுக்கு டெபாசிட் கிடைத்திருக்காது.

ஏற்கனவே, இருந்த வாக்கு வங்கி, கூட்டணியெல்லாம் பார்த்து கணக்கு பார்த்துக்கொண்டு திமுகவினர் இருந்துவிட்டார்கள். அதிமுக கோல்மால்களை செய்து டெபாசிட் வாங்கிவிட்டது. திமுக சோம்பேறித்தனத்தை தவிர்த்து செயல்பட்டிருந்தால், அதிமுக டெபாசிட் வாங்கியிருக்காது. நான் திமுகதான் 2வது இடத்தை பிடிக்கும் என எதிர்பார்த்தேன். அதிமுக டெபாசிட் வாங்கியது எனக்கு வருத்தம்தான். இவ்வாறு தினகரன் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

English summary
Independent MLA TTV Dinakaran said that the DMK was lazy in RK Nagar. The DMK had just looked at the vote bank and the alliance only, he added.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற