அரசு மிஷினே செயல்படலை... விஷனை எப்படி செயல்படுத்துவார்கள்- தினகரன் கிண்டல்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சட்டசபைக்கு வெளியே தினகரன் பரபர பேட்டி- வீடியோ

  சென்னை: ஆளுநர் உரையில் எந்தவித முக்கிய அம்சங்களுமே கூறப்படவில்லை. எந்த அறிவிப்புகளும் இல்லை என்று டிடிவி தினகரன் எம்எல்ஏ கூறியுள்ளார்.

  சட்டசபையில் முதல்நாளான இன்று தனி ஆளாக சென்று ஆளுநர் உரையை குறிப்பெடுக்கத் தொடங்கினார் டிடிவி தினகரன் அந்த உரையை கையில் வைத்துக்கொண்டு செய்திளாகர்களிடம் பேசினார் டிடிவி தினகரன்.

  விஷன் 2023 என்று ஆளுநர் உரையில் கூறியுள்ளனர். அரசு மிஷினே செயல்படாத போது விஷன் எப்படி செயல்படுத்துவார்கள் என்று தினகரன் கேள்வி எழுப்பினார்.

  ஓகி புயல்

  ஓகி புயல்

  ஓகி புயலில் பாதிக்கப்பட்ட மீனவர்களை மீட்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேசிய பேரழிவாக அறிவிக்கவில்லை. கூடங்குளத்தில் அணு உலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

  ஆளுநர் உரை

  ஆளுநர் உரை

  ஆளுநர் உரை சரியான கண்துடைப்பு. மெஜாரிட்டி இருக்கிறதா என்று கேட்கும் ஆளுநர், இப்போது அரசை பாராட்டிக்கொண்டிக்கிறார். இது ஓரு சடங்குமாதிரி இருக்கிறது.

  அரசே செயல்படவில்லை

  அரசே செயல்படவில்லை

  இந்த அரசே செயல்படவில்லை. அவர்களுக்கு உள்ளேயே பயம் இருக்கிறது. அதுதான் மேஜையை தட்டிக்கொள்கின்றனர். நித்திய கண்டம் பூரண ஆயுசாக உள்ளது.

  விரைவில் கவிழும்

  விரைவில் கவிழும்

  இந்த ஆட்சி விரைவில் கவிழும். அது அவர்களுக்கே நன்றாக தெரியும். சில எம்எல்ஏக்கள் என்னைப்பார்த்து பார்க்காதது போல குனிந்து கொள்கின்றனர் என்றும் தினகரன் கூறியுள்ளார். இங்க போய் தொழில் முதலீடு செய்ய யாராவது முதலீட்டாளர்கள் வருவார்களா என்றும் தினகரன் கேட்டுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  RK Nagar MLA TTV dinakaran has slamed Governor address in TamilNadu assembly and Vision 2023.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற