ஆர்கே நகர் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன்.. டிடிவி தினகரன் திட்டவட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெல்லை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்கே நகர் தொகுதிக்கு ஏற்கனவே இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அந்த தொகுதிக்கு இதுவரை தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

TTV Dinakaran will contest in the RK Nagar by poll

டிசம்பருக்குள் ஆர் கே.நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று சென்னை ஹைகோர்ட்டில் தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட டி.டி.வி.தினகரன் முடிவு செய்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டி.டி.வி.தினகரன் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி ஆர்கே நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது தினகரன் தரப்பு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக சிக்கிய ஆவணத்தால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

English summary
TTV Dinakaran will contest in the RK Nagar by poll. Dinakaran said this in a press meet at nellai.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X