மஞ்ச தண்ணி தெளிச்ச ஆடு மாதிரியே இருக்கீங்க மச்சான்... டிவிட்டரில் அட்சயதிரிதியை கலகல!
அட்சய திரிதியை தினத்தில் தங்கம் வாங்கினால் பெருகும் என்பது நம்பிக்கை. இதை சாக்காக வைத்து காலை 5 மணிக்கே எழுப்பி வீட்டில் பூஜை செய்து நகைக்கடைக்கு அழைத்துப்போன இல்லத்தரசிகள் இருக்கின்றனர்.
ஒருகிராம் தங்கமாவது இன்றைக்கு வாங்கிவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டு அலைமோதிய பெண்கள் கூட்டம் ஒருபுறம் இருக்க அதற்கு போலீஸ் பந்தோபஸ்து எல்லாம் போட்டு நகைக்கடைகளை காசை அள்ளிக்கொண்டிருக்கின்றன.
சினிமா, அரசியல் மட்டுமல்ல அட்சய திரிதியை பற்றியும் அடித்து ஆடுவோம்ல என்று நம் ட்விட்டர்வாசிகள் காலையில் இருந்தே நகை வாங்குபவர்களை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.
அதோடு அட்சய திரிதியை தினத்தன்று ஒரு ட்வீட் போட்டால் ரீ-டீவீட் பெருகும் என்று ஐதீகத்தில் புதிய கோட்பாடுகளைப் புகுத்தி ட்விட்டி வருகின்றனர்.
|
நல்லா பெருகட்டும்
அட்சய திரிதியைக்கு விவசாயம் பண்ணுங்க அதுவாவது பெருகுதா என்று பார்ப்போம்
|
தானம் செய்யுங்கள்
யாரவது ஒருவருக்கு தானம் செய்யலாம்.பசியில் இருப்பவர் சாப்பாடு வாங்கி தரலாம். அட்சய திரிதியை இன்று.
|
ஏன் விற்கணும்?
அட்சய திருதியை அன்னிக்கு நகை வாங்கினா தங்கம் சேரும்னா ௭துக்கு தங்கம் விக்கிறான்.
|
கடன் வாங்கி நகை வாங்கி
கடன் வாங்கி நகை வாங்கி கடன்காரன்கிட்ட பேச்சு வாங்கி அவமானம் பெருகுவதைவிட, நாலு ஏழைங்களுக்கு சோறுபோட்டு மனநிறைவப் பெருக்குங்க டோலர்ஸ்! என்று கர்ணன் என்பவர் ட்விட்டியுள்ளார்.
|
கணவர்களின் நிலை
எல்லா நாட்டுக்காரனும் ஒலிம்பிக்ஸில் தங்கம் வாங்க ஓடுகிறான். தமிழனோ தங்கம் வாங்க தியாகராயநகருக்கு ஓடுகிறான்.#அட்சய திரிதியை என்று ட்விட்டியுள்ளார் ஒருவர். அதேபோல இன்று ஜுவல்லரி செல்வோரை பார்க்கும் போது மஞ்ச தண்ணி தெளித்த ஆடு போல தெரிகிறார்கள் என்று ட்விட்டியுள்ளார் ஒரு வலைஞர். கஷ்டம்டா சாமி.
|
ட்வீட் போடுங்க பெருகும்
அட்சய திரிதியை அன்னைக்கு RT பண்ணுனா..வருஷம் முழுக்க RT பெருகும்கறது ஐ(டி)தீகம்..
|
நகை விற்பவர்கள் கதி
அட்சய திரிதியை அன்று நகை வாங்குபவர்களுக்கு செல்வம் செழிக்கும் என்றால், அன்று நகை விற்றவர்கள் இந்நேரம் பிச்சைக்காரனாய் அல்லவா ஆகியிருக்கணும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications