ஆர்.கே.நகரில் மோதும் மண்ணின் மைந்தர்கள்.. மக்கள் ஆதரவு யாருக்கு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பன்னீர் செல்வம் அணி சார்பில் அவைத்தலைவர் மதுசூதனன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். உள்ளூர்காரர்களான திமுகவின் மருது கணேஷ் மற்றும் ஓபிஎஸ் அதிமுகவின் மதுசூதனனும் போட்டியிடுவதால் ஆர்.கே.நகர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருந்தது. இதனால் வருகிற 12ம் தேதி அந்த தொகுதிக்கு தேர்தல் நடைபெறுகிறது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் அதிகாரச் சண்டை வலுப்பெற்றது. இதனைத்தொடர்ந்து சசிகலா அணி, ஓபிஎஸ் , ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அணி என 3 அணிகளாக பிளவுப்பட்டுள்ளது.

மதுசூதனன் போட்டி

மதுசூதனன் போட்டி

ஏற்கனவே சசிகலா தரப்பு அதிமுக, திமுக, தேமுதிக வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். மேலும் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் அந்த தொகுதியில் தொடங்கியது.

இந்நிலையில் , ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பன்னீர் செல்வம் அணி சார்பில் அவைத்தலைவர் மதுசூதனன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஓபிஎஸ் அணியின் ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் இது தொடர்பாக முடிவு செய்து இன்று அறிவிக்கப்பட்டது.

வாக்கு சிதறல்

வாக்கு சிதறல்

ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக கைவசமாக இருந்துவந்தது. ஆனால் தற்போது அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் பிளவினால் அதிமுக வாக்குகள் சிதற வாய்ப்புள்ளது. திமுகவை பொறுத்தவரை புதுமுகமான மருதுகணேஷை களத்தில் இறக்கியுள்ளது. சொந்தவூர் என்பதால் மருதுகணேஷுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது.

இருவரும் உள்ளூர் பிரமுகர்கள்

இருவரும் உள்ளூர் பிரமுகர்கள்

இதற்கிடையே ஓ.பி.எஸ் அணியின் ஆர்.கே.நகர் வேட்பாளர்களாக மதுசூதனன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் சசிகலா தரப்பினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மதுசூதனன் ஆர்.கே. நகர் தொகுதியை சேர்ந்தவர். அதுமட்டுமில்லாமல் 1991ம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். மேலும் 1991 முதல் 1996ம் ஆண்டு வரை கைத்தறித்துறை அமைச்சராக மதுசூதனன் இருந்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராகவும் மதுசூதனன் திகழ்ந்தவர்.

தீபா தரப்பு

தீபா தரப்பு

இந்நிலையில் ஆர்.கே.நகரில், உள்ளூர்காரர்களான திமுகவின் மருது கணேஷ் மற்றும் ஓபிஎஸ் அதிமுகவின் மதுசூதனனும் போட்டியிடுவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆர்.கே நகரில் செல்வாக்கு மிகுந்த ஒரு நபரை ஓபிஎஸ் அணியினர் அறிவித்ததால் சசிகலா தரபினர் மற்றும் தீபா தரப்பினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
To Candidates are selected from the native place for RK Nagar by election. DMK candidate Marudhu Ganesh are brought up in RK Nagar as well OPS Team Candidate Madhusoudhanan
Please Wait while comments are loading...