மணப்பாறையில் மாயமான மாணவிகள் உடல் ரயில் தண்டவாளத்தில் மீட்பு- அதிர்ச்சி வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருச்சி: மணப்பாறை அருகே காணாமல் போன பத்தாம் வகுப்பு மாணவிகள் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். மாணவிகள் தற்கொலை செய்து கொண்டார்களா? கொலை செய்யப்பட்டார்களா என போலீசார் விசாரிக்கின்றனர்.

மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டியைச் சேர்ந்த பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவிகள் ரதி தேவி மற்றும் செல்வி. நேற்று காலை பள்ளிக்குச் சென்ற இருவரும் வீடு திரும்பவில்லை என்பதால் அதிர்ச்சியடைந்த அவர்களின் பெற்றோர் தோழிகளின் வீடு, உறவினர்கள் வீடு என தேடியலைந்துள்ளனர். ஆனால் எங்கும் அவர்கள் கிடைக்கவில்லை.

Two girl students body found in railway track near Manapparai

இந்நிலையில் இன்று காலை இருவரும் தட்டாரம்பட்டி என்னும் ஊர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்துள்ளனர். இதை அறிந்த போலீசார் அங்கு வந்து உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த இரண்டு மாணவிகளும் அங்கு எப்படி வந்தனர், தற்கொலை செய்துகொண்டார்களா? அல்லது கொல்லப்பட்டார்களா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு இளம் மாணவிகள் அநியாயமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Near Manapparai two 10th standard girl students found dead in railway track. Police registered a case and inquiry it whether it was a murder or suicide.
Please Wait while comments are loading...