வாடிப்பட்டி அருகே நின்றுகொண்டிருந்த அரசு பேருந்து மீது லாரி மோதி 2 பேர் பலி- பேர் படுகாயம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பழுதாகி நின்ற அரசு பேருந்தின்மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 8 பேர் படுகாயமடைந்தனர்.

மதுரை ஆரப்பாளையத்தில் இருந்து ஓசூருக்கு அரசுபேருந்து ஒன்று 28 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. இன்று அதிகாலை வாடிப்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று பழுதாகி நின்றுவிட்டது.

Two killed truck collide on government bus near Vadipatti

இதனால் பேருந்தினை ஓட்டுனர் சாலை ஓரமாக நிறுத்தினார். பின்னர் மாற்று பேருந்தில் ஏற்றிவிட அனைத்து பயணிகளையும் கீழே இறங்க சொன்னார். பயணிகள் அனைவரும் இறங்கி பேருந்தின் ஓரமாக நின்று கொண்டிருந்தனர்.

அப்போது தூத்துக்குடியில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு லாரியானது. எதிர்பாராத விதமாக அரசு பேருந்தின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இதில் பேருந்தின் பின்புறம் நொறுங்கிதில் 2 பேர் சம்பவ இடத்திலேய உடல் நசுங்கி உயிரிழந்தனர். 8 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்த வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Two people were killed when a truck collided with a government bus near Vadipatti. When traveling on the National Highway near Vadipatti, all the passengers were on the run down and suddenly the bus got off. Then the lorry was loaded with coal from Thoothukudi bumped into the bus. Two of them died at the scene of the body and died and 8 people were injured.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற