For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதா விடுதலையை விமர்சனம் செய்து போஸ்டர்.. கோவையில் தந்தை-மகன் கைது!

By Veera Kumar
Google Oneindia Tamil News

கோவை: சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை விமர்சனம் செய்து போஸ்டர் ஒட்டியதற்காக, கோவையை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில், சிறப்பு நீதிமன்றத்தால் சிறை தண்டனைக்குள்ளான தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக ஹைகோர்ட்டால் கடந்த மாதம் 11ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.

Two persons arrested for criticise Jayalalitha's acquittal

இந்த தீர்ப்பை சிலர் வரவேற்றுள்ளனர், சிலர் எதிர்த்து கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், விடுதலையை விமர்சனம் செய்து புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பில், கோவை, சாய்பாபா காலனி பகுதியில், போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

இந்த போஸ்டரை பார்த்ததும், அதை ஒட்டியவர்களை போலீசார் தீவிரமாக தேடத் தொடங்கினர். இது தொடர்பாக, ஜனநாயக தொழிலாளர் முன்னணி அமைப்பின் மாநில துணைத் தலைவர் ராமசாமி மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலைவர் திலீபன் ஆகியோரை, போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். இவர்கள், தந்தை-மகன் ஆகும். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Two persons arrested in Coimbatore for criticize Jayalalitha's acquittal from the asset case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X