தூத்துக்குடியில் அனுமதியின்றி சரக்கு பாட்டில்களை பதுக்கிய இரண்டு பேர் கைது!
தூத்துக்குடியில் அனுமதியின்றி சரக்கு பாட்டில்களை கடத்திய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் அனுமதியின்றி சரக்கு பாட்டில்களை கடத்திய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் மதுகடைகளுக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதன் எதிரோலியாக மது பாட்டில்களை எப்படி விற்பது என தெரியாமல் டாஸ்மாக் ஊழியர்கள் திணறி வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே பனப்பட்டி கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணையில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமையாவுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் சப்-இன்ஸ் பெக்டர் சண்முகநாதன் தலைமையிலான போலீசார் சம்பந்தபட்ட கோழிப்பண்ணைக்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கூடுதல் விலைக்கு விற்கப்படுவதற்காக 574 மதுப்பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கோழிப் பண்ணையில் பதுங்கியிருந்த அதே பகுதியைச் சேர்ந்த கணேசன், ராமசாமி ஆகிய இருவரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை மாவட்ட மதுவிலக்கு கூடுதல் துணைபோலீஸ் சூப்பிரண்டு கந்தசாமி பார்வையிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications