பெட்ரோமாஸ் லைட்டேதான் வேணுமா?: போட்டியிட்டா அது கோவையில்தான்.. தமிழக பாஜக பெண் தலைவர்கள் அடம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜகவின் முக்கிய தலைவர்கள் பலரும் கோவையில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருப்பதால் அங்கு ஒரு குடுமிப்பிடி சண்டை காத்திருப்பதாக கூறுகிறது அக்கட்சி வட்டாரங்கள்.

தமிழகத்தை பொறுத்தளவில் பாஜக பலமாக இருப்பதாக நம்பும் மாவட்டங்களில் முதன்மையானது கோவை. அடுத்தது, கன்னியாகுமரி.

இதில் கன்னியாகுமரியில் சிட்டிங் எம்.பி.யாக இருப்பவர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். இருப்பினும், அங்கு, திமுக, அதிமுக நடுவே கடும் போட்டி உள்ளது.

கோவை சேஃப்டி

கோவை சேஃப்டி

அம்மாவட்டத்திலுள்ள கணிசமான கிறிஸ்தவர் வாக்குகள் பாஜகவுக்கு வருவதில்லை என்று கூறப்படுகிறது. அதேநேரம், கோவை, பாஜகவுக்கு மிகவும் பாதுகாப்பான தொகுதியாக உள்ளது. குறைந்தபட்சம் டெபாசிட்டையாவது கேரண்டியாக தேற்றிவிடலாம்.

தமிழிசை லாபி

தமிழிசை லாபி

பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜனும் இதனால்தான் கோவையில் உள்ள சட்டசபை தொகுதிகளில் ஏதாவது ஒன்றை தான் போட்டியிட ஒதுக்கிதருமாறு பாஜக மேலிடத்திடம் தாஜா செய்துகொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வானதிக்கும் வேண்டும்

வானதிக்கும் வேண்டும்

பல்வேறு டிவி விவாதங்களில் பங்கேற்று வருபவரும், கோவை நகரை சேர்ந்த மண்ணின் மகளுமான, பாஜக துணை தலைவர் வானதி சீனிவாசனும், இந்த போட்டியில் இருக்கும் முக்கிய புள்ளியாகும்.

பொதுச்செயலாளரும்

பொதுச்செயலாளரும்

இதுதவிர மாநில பொதுச்செயலாளர் ஜி.கே.எஸ்.செல்வகுமாரும், தனக்கு கோவையிலுள்ள தொகுதிதான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறாராம்.

கவுன்சிலர் ஆசை

கவுன்சிலர் ஆசை

கோவையில் பாஜக கவுன்சிலராக உள்ள மைதிலி வினோ, தனக்கு கோவை வடக்கு அல்லது கவுண்டம்பாளையம் ஆகிய இரு தொகுதிகளில் ஒன்றை ஒதுக்கித்தருமாறு வேண்டுகோள்விடுத்து வருகிறாராம்.

ஒரே தொகுதிக்கு அடம்

ஒரே தொகுதிக்கு அடம்

பாஜக சார்பில் போட்டியிட மாநிலம் முழுவதிலும் சுமார் 3000 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்கள். அதில், 360 விண்ணப்பங்கள் கோவையில் போட்டியிட வாய்ப்பு தருமாறு கேட்டு வந்துள்ளன. அதில் 37 பேர் பெண்கள்.

மேலிடம் சொல்லும்

மேலிடம் சொல்லும்

வானதி சீனிவாசன் இதுகுறித்து கூறுகையில், கோவை மட்டுமல்ல, பல்வேறு தொகுதிகளிலும் எனது பெயர் பரிசீலனையில் உள்ளது. மேலிடம் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன் என்றார்.

பெட்ரோமாஸ் லைட்டேதான் வேணுமா

பெட்ரோமாஸ் லைட்டேதான் வேணுமா

கோவை தொகுதிக்கான, களேபரம், வேட்பாளர் அறிவிப்பு நேரத்தில், களைகட்டலாம். கோஷ்டி பூசலால் ஒருவருக்கொருவர் காலை பிடித்து இழுத்து யாரையும் வெற்றி பெறச்செய்யவிடாமல் தடுக்கவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள் சில, கோவை பாஜக நிர்வாகிகள். ஏம்ப்பா, கோவையேதான் வேணுமா, இந்த சென்னையெல்லாம் வேண்டாமா? என பெட்ரோமாஸ் லைட் பாணியில் டெல்லி தலைவர்கள் கேட்கத்தான் போகிறார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
As Bharatiya Janata Party kick-started the process of hand-picking candidates for the upcoming assembly election, there seems to be a palpable clamour among party leaders to contest in Coimbatore, a relatively safe turf where the party has a good following.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற