முறை தவறிய உறவால் தங்கை கொலை... தற்கொலைக்கு முயன்ற அண்ணன் கைது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவலம்: வேலூர் அருகே முறை தவறிய உறவால் அண்ணன், சித்திமகளை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். தற்கொலைக்கு முயன்று உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த அவரை போலிசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன் கற்பகம் தம்பதியின் மகள் அமுதா. 12ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவர் தையற்பயிற்சி பெற்று வந்தார். இவர்களது வீட்டில் கற்பகத்தின அக்காள் மகன் சபரி கடந்த ஓராண்டுகளாக தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார்.

unfair relationship : brother kills sister in Vellore!

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீடு இருண்டுக் கிடந்ததால் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்துள்ளனர். அப்போது அமுதா மர்மமான முறையில் இறந்து கிடந்ததைக் கண்டு போலீசாருக்கு தகவல்தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அமுதா அருகில் கிடந்த வெற்று சிரஞ்ச் உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். பின்னர் வீட்டில் இருந்த சபரி மாயமாகியிருப்பதை அறிந்த போலீசார் உறவினர் ஒருவர் வீட்டில் பதுங்கியிருந்த அவரை கைது செய்து விசாரித்தனர்.

அதில் அமுதாவுக்கும் சபரிக்கும் இடையே கடந்த ஓராண்டாக முறை தவறிய உறவு இருந்ததும் இது வெளியே தெரிந்தால் அவமானமிகிவிடும் என்பதால் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததும் தெரியவந்தது.

இருவரும் ராஜ்ஜியம் பட ஸ்டைலில் வெற்று சிரஞ்சில் காற்றை நிரப்பி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அது பலனளிக்காததால் அமுதாவை கழுத்தை நெரித்து சபரி கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அப்போது வீட்டிற்கு யாரோ வருவதுபோல் தெரிந்ததால் தப்பியோடிய சபரி உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியுள்ளார்.இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A Brother and sister was having unfair relationship for last one year. after realizing their mistakes they tried commit suicide in cinema style. when it was not working brother killed sister and tried to commit suicide caught to police in Vellore.
Please Wait while comments are loading...