நெல்லை கூலித்தொழிலாளி இசக்கி முத்து குடும்பத்தோடு தீக்குளிக்க கந்து வட்டி காரணமில்லையாம்: காவல்துறை

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெல்லை: கூலித் தொழிலாளிஇசக்கிமுத்து தனதுகுடும்பத்துடன் தீக்குளித்ததற்கு கந்துவட்டிகாரணமில்லை என்றும் கடன் தான்காரணம் என போலீசார் அறிக்கைதாக்கல் செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டஆட்சியர் அலுவலகவளாகத்தில் கடந்த ஆண்டுஅக்டோபர் மாதம் குடும்பத்துடன்கூலித் தொழிலாளிஇசக்கிமுத்து மண்ணெண்ணெய் ஊற்றிதீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டார்.

 Usury Interest problem is not the cause for Essakimuthu family’s suicide says Police

தமிழகம் முழுவதும் இந்தசம்பவம் பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கந்து வட்டிக்கொடுமையால் இந்தவிபரீத சம்பவம்நடந்துள்ளதாக கூறப்பட்டது. ஆட்சியரிடமும், காவல்துறையினரிடமும் பல முறை புகார்அளித்தும் உரியநடவடிக்கை எடுக்காமல்அதிகாரிகள் அலட்சியம்காட்டியதால்தான் இசக்கிமுத்து குடும்பத்துடன்தீக்குளித்ததாக புகார்எழுந்துள்ளது.

இதனால்ஆட்சியருக்கும், காவல்துறையினருக்கும் கடும் கண்டனம் எழுந்தது. இந்நிலையில் இந்த தற்கொலை சம்பவம்தொடர்பாக விசாரணை நடத்த போலீசார்குழு அமைக்கப்பட்டது. முழுமையான விசாரணையை தொடர்ந்து தற்போது அக்குழு அறிக்கைஒன்றை தாக்கல் செய்துள்ளது.

அதில் இசக்கிமுத்து கடன் தொல்லையால் குடும்பத்துடன்தற்கொலை செய்துக்கொண்டதாகவும், கடனிலிருந்து தப்பிக்கவே அவர்கள் கடன்கொடுத்தவர்கள் மீதேதவறான புகார் அளித்ததாகவும் அறிக்கைதெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்முக்கியமாக கந்துவட்டி கொடுமையால் அவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளவில்லைஎன்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Usury Interest problem is not the cause for Nellai Worker Esakimuthu and his family suicide says Police. And also they have said debut troublesome is the main cause

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற