For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீக்குளித்த தொண்டரை இயற்கை அன்னை காப்பாற்ற வேண்டும் : கண்ணீர்மல்க வைகோ வேதனை!

மதுரையில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ தொடங்கும் நடைபயண பேரணியில் மதிமுக தொண்டர் ரவி தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இளைஞரின் தீக்குளிப்பு சம்பவத்தை நேரில் பார்த்த வைகோ மேடைய

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    வைகோவின் நடைப்பயணத்தில் தொண்டர் தீக்குளித்ததால் பரபரப்பு

    மதுரை : நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் இருந்து கம்பம் வரை நடைபயண பிரச்சாரம் மேற்கொண்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மதுரை பொதுக்கூட்டத்தில் தொண்டர் ஒருவர் தீக்குளித்தார். இந்த தீக்குளிப்பு சம்பவத்தை பார்த்து மேடையில் இருந்த வைகோ கண்ணீர் மல்க பேசிவிட்டு தன்னுடைய நடைபயணத்தை தொடர்வதாக தெரிவித்தார்.

    மதிமுக தொண்டர் ரவி தீக்குளித்த நிலையில் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதையடுத்து மேடையில் கண்ணீர் மல்க வைகோ பேசியதாவது : என்னுடைய தம்பியை காப்பாற்றம்மா. இந்த தம்பிக்கு 30, 35 வயது கூட இருக்காது, அவனுடைய குடும்பத்தார் அவனை நம்பித் தானே இருக்கிறார்கள். என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. பிரச்சாரத்தை தொடங்குவதற்காக மேடையில் மதிமுக நிர்வாகி நிறைவு உரையாற்றுவார் என்று சொல்லி முடிக்கிறோம் நெருப்பு தனலாக பல உயரத்திற்கு வந்துவிட்டானே.

    Vaiko cried at stage for his party cadre set ablaze

    கட்சித்தொண்டர்களுக்கு நான் எவ்வளவோ சொல்லி இருக்கிறேன். எந்தநிலையிலும் தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறேனே என்று வைகோ மேடையில் கண்ணீர் விட்டார். இப்படித் தான் 1993ல் 5பேர் தீக்குளித்தார்கள். அதனால் தான் இந்த கட்சியை தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    நெஞ்சம் வெடிக்கும் வேதனையோடு இப்போது நான் என் கடமையாற்ற செல்ல வேண்டி இருக்கிறது. இயற்கை எப்படியாவது அந்த வீரத்தம்பியை மீட்டு கொடுக்க வேண்டும் என்று இயற்கை அன்னையின் பாதங்களை மன்றாடி இறைஞ்சி கேட்டுக் கொள்கிறேன். பயணத்தை நான் தொடர்கிறேன் என்று சொல்லி நியூட்ரினோ திட்டத்திற்கு எதிரான தன்னுடைய நடைபயணத்தை வைகோ தொடர்ந்தார்.

    English summary
    MDMK chief Vaiko cried at stage and continue his rally against Neutrino project for his party cadre set ablaze himself at Madurai meeting and requests all not to do this here after.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X