அப்பா எப்படி இருக்காரு இப்போ?... கனிமொழியிடம் விசாரித்த வைகோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல் நிலைக் குறித்து அவரது மகள் கனிமொழியிடம் விசாரித்ததாக வைகோ தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, திருச்சியில் இருந்து விமானத்தில் சென்னை வந்தடைந்தார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: தி.மு.க. தலைவர் கலைஞர் கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நலம் குன்றியதாக அறிந்ததும் அவரது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தேன். இந்நிலையில், மீண்டும் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். உடனே கனிமொழியிடம் கலைஞர் பற்றி நலம் விசாரித்தேன். அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டுகிறேன். இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

Vaiko enquirs about the health of the Karunanidhi to Kanimozhi

நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chennai: MDMK general secretary Vaiko enquiry about the health of the Karunanidhi to Kanimozhi on Friday
Please Wait while comments are loading...