For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாணவி அனிதா இல்லத்தில் வைகோ - உறவினர்களுக்கு ஆறுதல்

அரியலூர் மாவட்டம் குழுமூரில் மாணவி அனிதா குடும்பத்தினரை சந்தித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் ஆறுதல் கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

அரியலூர்: அரியலூர் மாவட்டம் குழுமூரில் மாணவி அனிதாவின் தந்தை மற்றும் சகோதரரை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

நீட் தேர்வு காரணமாக மருத்துவ கல்வி படிக்க முடியாமல் போனதால் மனமுடைந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

Vaiko meets Anitha family

இது தொடர்பாக கருத்து கூறியுள்ள வைகோ, அனிதாவின் துயர மரணத்திற்கு மத்திய அரசே காரணம் என்றார். மாநில அரசு தவறு செய்தால் முதலில் கண்டிப்பது நான்தான். நீட் விவகாரத்தில் தமிழக அரசு இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது. ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இவ்வாறு நடந்திருக்காது என்று கூறினார்.

மதிப்பெண் குறைந்தாலும், தேர்வில் தோல்வியுற்றாலும் கவலைப் படாமல் இருக்க பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும். ஒரு கதவு மூடினால் மறு கதவு திறக்கும் என்று அறிவுறுத்த வேண்டும் என்றும் வைகோ கேட்டுக்கொண்டிருந்தார்.

இன்று வைகோ, அரியலூர் மாவட்டம் குழுமூரில் மாணவி அனிதாவின் தந்தை மற்றும் சகோதரரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

English summary
MDMK general secretary meets family Of Anitha, Who Killed Herself Over NEET.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X