பட்டா மாற்ற ரூ.4500 லஞ்சம்: வேலூர் அருகே விஏஓ கைது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆம்பூர்: ஆம்பூரை அடுத்த பெரியாங்குப்பத்தில் ராஜேந்திரன் என்பவரிடம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார். பட்டா மாற்ற அவர் 4500 ரூபாய் லஞ்சம் பெற்றபோது கைதானார்.

வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பெரியாங்குப்பம் கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் பழனி. இவரை பட்டா மாறுதலுக்காக ராஜேந்திரன் என்பவர் அனுகியுள்ளார்.

VAO arrested for accepting bribe in near Vellore!

அப்போது பட்டா மாற்ற சான்றிதழில் கையெழுத்திட விஏஓ பழனி, ராஜேந்திரனிடம் 4500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதனை கொடுக்க மனமில்லாத ராஜேந்திரன் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து அதிகாரிகள் அளித்த ஆலோசனையின் படி ரசாயணம் தடவிய பணத்தை ராஜேந்திரன் பழனியிடம் வழங்கியுள்ளார். பணத்தை பழனி பெற்ற போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A VAO arrested in near vellore for accepting bribe from a person who wants sign to change the patta. Regarding his complaint vigilance police arrested him.
Please Wait while comments are loading...