For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வர்தா புயலால் ஆக்ரோஷமாக பொங்கும் கடல் அலைகள்- வீடியோ

வர்தா புயல் சென்னையை நெருங்கி வருவதால் கடல் அலைகள் சீற்றத்துடன் எழுந்து அடங்குகின்றன. திருவொற்றியூர் கடற்கரை சாலைகளில் பாறைகள் சாலைககளில் தூக்கி வீசப்பட்டுள்ளன.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: வர்தா புயல் இன்று பிற்பகலில் சென்னைக்கு மிக அருகே பழவேற்காடு - கும்மிடிப்பூண்டி இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னைக்கு கிழக்கே 140 கி.மீ அருகில் மையம் கொண்டுள்ள இந்த புயல் 13 கி.மீ வேகத்தில் சென்னையை நெருங்கி வருகிறது.

வர்தா புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 3,500 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு முதல் இன்று காலை வரை இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

Vardah cyclone: Sea eruption in Chennai's seashores

கடற்காற்று 120 கி.மீ வேகத்தில் வீசுகிறது. மெரீனா கடற்கரை, பட்டினப்பாக்கம், திருவெற்றியூர், எண்ணூர் பகுதியில் கடல் அலைகள் ஆக்ரோஷமாக சீற்றத்துடன் எழுந்து அடங்குகின்றன. மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவில்லை.

கடல் அலையின் வேகத்தால் பறைகள் தூக்கி வீசப்பட்டுள்ளதால் கடற்கரை சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பழவேற்காடு - கும்மிடிப்பூண்டி இடையே வர்தா புயல் கரையை கடக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால் கடற்கரையோரம் வசிப்பவர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

English summary
Rough sea, strong winds are lashing the Chennai city's seashores due to the cyclone Vardah.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X