For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தென்னந்தோப்பு தனி மரமானது.. அதிமுக கூட்டணியில் வாசனுக்கு இடமில்லை

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்திலுள்ள 227 சட்டசபை தொகுதிகளில் அதிமுக போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு 7 தொகுதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள நிலையில், இக்கூட்டணியில் இணைய தவமிருந்த தமிழ் மாநில காங்கிரஸ் நிலைமை அம்பேலாகியுள்ளது.,

அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும் என்பதற்காகவே காங்கிரசிலிருந்து பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கியவர் போல பேசி வந்தார் அதன் தலைவர் ஜி.கே.வாசன். கட்சி தொடங்கிய நாள் முதலே, அதிமுகவை பெரிய அளவில் விமர்சனம் செய்தது கிடையாது.

தேர்தல் கூட்டணி பேச்சு வார்த்தை நெருங்கிய நிலையில் அதிமுக கூட்டணியில் எப்படியாவது இடம் பிடித்துவிட வேண்டும் என்று திரைமறைவில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாக கூறுகிறார்கள் வாசனை அறிந்தோர்.

சின்னம்

சின்னம்

அதேநேரம், அதிமுக கூட்டணியில் போட்டியிட்டால், இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்பது ஜெயலலிதா போட்ட நிபந்தனை என்று கிசுகிசுக்கப்படுகிறது. தனிக் கட்சி தொடங்கி காங்கிரசுக்கு போட்டியளிக்க திட்டமிட்ட வாசனுக்கு, இந்த நிபந்தனையை ஒப்புக்கொள்ள மனமில்லை.

தென்னந்தோப்பு

தென்னந்தோப்பு

இந்நிலையில், வாசனுக்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த சின்னத்திலேயே போட்டியிட விரும்புவதாக வாசன் தூதுவிட்ட நிலையில் போயஸ்கார்டன் கதவுகள் பூட்டப்பட்டன. இதனால் மக்கள் நல கூட்டணி பக்கம் செல்லலாமா என்று வாசன் யோசிக்க தொடங்கியுள்ளார்.

தேமுதிக கிடுக்கிப்பிடி

தேமுதிக கிடுக்கிப்பிடி

மக்கள் நல கூட்டணியில் வாசன் கட்சிக்கு தொகுதியை பங்கிட்டுக் கொடுக்க தேமுதிக தயாராக இல்லை. 124 தொகுதிகளை தேமுதிகவிடம் இழந்துவிட்டு 110 தொகுதிகளை 4 கட்சிகள் பங்கிட்டுக்கொண்டுள்ளன. எனவே அவையும் தங்கள் கையிருப்பில் இருந்து வாசனுக்கு தொகுதிகளை ஒதுக்க தயாராக இல்லை.

7 தொகுதிகளுக்கு கூட்டணிக்கு

7 தொகுதிகளுக்கு கூட்டணிக்கு

இந்நிலையில், 227 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக இன்று அறிவித்துள்ளது. 7 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சமத்துவ மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னணி, தமிமுன் அன்சாரியின், மனிதநேய ஜனநாயகக் கட்சி, மூவேந்தர் முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம், புரட்சி பாரதம் ஆகிய குட்டி கட்சிகள் அதிமுக கூட்டணியில் உள்ளது.

English summary
Vasan's TMC can't get seat in the Aiadmk alliance as the party released it's candidates list.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X