ஆர்கே நகரில் பாஜகவுக்கு கடைசியிடம்.. மக்கள் அடித்திருக்கும் ஆப்பு: சொல்கிறது விசிக!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்கே நகரில் பாஜகவுக்கு கடைசியிடம் கிடைத்திருப்பது அக்கட்சிக்கு மக்கள் அடித்திருக்கும் ஆப்பு என விடுதலை சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது.

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றுள்ளார். அதேநேரத்தில் பாஜக நோட்டா பெற்ற வாக்குகளை காட்டியும் குறைவான வாக்குகளை பெற்று கடைசி இடத்தை பிடித்தது.

இந்நிலையில் இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆளுர் ஷானவாஸ் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

VCK deputy general secretary Aalur Shanavas statement on BJP votes in RK Nagar by poll

கட்சி இல்லை, கொடி இல்லை, சின்னம் இல்லை, தலைமை அலுவலகம் இல்லை, ஆட்சி இல்லை.
பெரா வழக்கு வேகம் பிடித்தது, சின்னம் பெற லஞ்சம் கொடுத்தார் எனச் சொல்லி கைது நடந்தது, வரலாற்றில் இல்லாத வகையில் வருமான வரிச் சோதனை நடந்தது, தமிழகம் முழுவதும் பரவலாக பல்வேறு வழக்குகள் பாய்ந்தது, கூட்டங்கள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது, ஆதரவாளர்கள் மீதும் அடக்குமுறை ஏவப்பட்டது, ஆதரவு எம்.எல்.ஏக்களின் பதவி பறிக்கப்பட்டது, ஏற்கெனவே போட்டியிட்ட தொப்பி சின்னம் மறுக்கப்பட்டது, ஓட்டு இயந்திரத்தில் கண்ணுக்குப் புலப்படாத இடத்தில் பெயரும் சின்னமும் வைக்கப்பட்டது, எங்கும் எப்போதும் காட்டாத கடுமையை ஆர்.கே.நகரில் தேர்தல் ஆணையம் காட்டியது என அனைத்தையும் கடந்து டி.டி.வி தினகரன் அதிக வாக்குகளை அள்ளியிருக்கிறார் எனில் அது வெறும் பணத்தால் மட்டுமா?

ஆர்.கே நகர் வாக்கு எண்ணிக்கையில் தினகரன் முதல் இடத்திலும், அவரை ஒடுக்கிய பா.ஜ.க கடைசி இடத்திலும் நிற்பது - தமிழக மக்களின் அரசியல் எண்ணத்தின் பிரதிபலிப்பே!
இந்த அடிமை ஆட்சியை வைத்து பா.ஜ.க ஆடும் வெறியாட்டத்துக்கு மக்கள் அடித்திருக்கும் ஆப்பே! இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆளுர் ஷானவாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
VCK deputy general secretary Aalur Shanavas statement on BJP votes in RK Nagar by poll. He said votes are judgemet for the BJP.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற