திமுக தலைவர் கருணாநிதியுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : திமுக தலைவர் கருணாநிதியை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று திடீரென சந்தித்துள்ளார். சென்னையிலுள்ள கோபாலபுரம் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உடன் இருந்தார்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலன் தேறியுள்ள நிலையில், அவரை அரசியல் கட்சிகள் சந்திப்பது வாடிக்கையாகியுள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் அரசியலுக்கு வருவதாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த் கருணாநிதியை சந்தித்தார்.

VCK leader Thirumavalavan met Karunanidhi at his gopalapuram residence

கருணாநிதி தன்னுடைய நண்பர் என்ற முறையில் சந்தித்ததாகவும், புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்ததாக ரஜினி தெரிவித்தார். தனது அரசியல் பிரவேசத்தை சொல்லி கருணாநிதியிடம் ஆசி பெற்றதாகவும் ரஜினிகாந்த் கூறி இருந்தார்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னை கோபாலபுரத்தில் கருணாநிதியை சந்தித்துள்ளார். அவருக்கு புத்தாண்டு வாழ்த்துகளை திருமாவளவன் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உடன் இருந்துள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக திமுக அழைப்பு விடுத்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்றது. அதனைத் தொடர்ந்து திமுகவுடன் தோழமையாக செயல்பட்டு வருகிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி. நடந்து முடிந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலிலும் திமுகவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
VCK leader Thirumavalavan met DMK chief Karunanidhi at his gopalapuram residence and wished him for New year.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற