விஸ்வகர்மா யோஜனா அல்ல! மனுதர்ம யோஜனா திட்டம்.. திராவிடர் கழகம் வீரமணி காட்டம்
தருமபுரி: விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் ஏமாந்தால் நம் பிள்ளைகள் மீண்டும் படிக்க சொல்ல மாட்டார்கள் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் குலத் தொழில் கல்வி திணிப்பு என்பது பாரம்பரிய தொழில் செய்பவர்களுக்கு கடன் உதவி கொடுக்க வேண்டுமே தவிர குரு சிஷ்ய முறையில் அப்பாவிடம் இருந்து பிள்ளை செய்ய வேண்டும் என்ற தொழிலுக்கு வழங்கக் கூடாது.
குறிப்பாக அரசின் இந்த திட்டத்திலேயே செருப்பு தைப்பவர்கள் போல் படங்கள் எல்லாம் போட்டிருக்கிறார்கள். இவர்களுடைய பிள்ளைகள் 12 ஆம் வகுப்பு படித்துவிட்டு ஐஏஎஸ் அதிகாரிகளாகவும் உயர்நீதிமன்ற நீதிபதிகளாகவும் ஆராய்ச்சியாளர்களாகவும் செல்லக் கூடாது என்பதற்காக 18 வயது ஆன பிறகு இந்த தொழில் செய்வதற்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு ஒரு லட்சம் நிதியுதவி தருவதாக தெரிவித்திருக்கிறார்கள்.
இதில் ஏமாந்தால் நம் பிள்ளைகள் மீண்டும் படிக்க சொல்ல மாட்டார்கள். இது மக்களுக்கு புரியவில்லை, ஒரு லட்சம் கொடுக்கிறார்களே ஏன் இதை தடுக்கிறார்கள் என நினைக்கிறார்கள் இது விஸ்வகர்மா யோஜனா திட்டம் இல்லை. மனு தர்ம யோஜனா திட்டம்.

நீட் தேர்வு விவகாரத்தில் சட்டபூர்வமாக கையெழுத்து வாங்கி வருகிறார்கள். ஆந்திரா, பீகார் போன்ற மாநிலங்களில் தற்கொலைகள் நடக்கின்றன. வன்முறையில் இறங்கவில்லை, ரயிலை கொளுத்தவில்லை, சட்டபூர்வமாக பிரதமருக்கும், குடியரசுத் தலைவருக்கும் கொடுத்தோம். அவர்கள் செய்யவில்லை என்பதை தெளிவாக மக்கள் உணர்வார்கள். இதற்கு பதில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஒரே பதில் வரும். நீட், அதானி, அது இது எல்லாமே முடிவுக்கு வரும். இவ்வாறு வீரமணி தெரிவித்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications