For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடி அரசின் திட்டப்படியே ஸ்டெர்லைட் படுகொலைகள்... தமிழக அரசே பதவி விலகு... வேல்முருகன் கொந்தளிப்பு

மோடி அரசின் திட்டப்படியே ஸ்டெர்லைட்டில் படுகொலைகள் செய்த தமிழக அரசு பதவி விலக வேண்டும் என்று வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    3-ஆவது நாளாக பதற்றம் நீடிக்கிறது... துணை ராணுவம் விரைகிறது

    சென்னை: மோடி அரசின் திட்டப்படியே ஸ்டெர்லைட்டில் படுகொலைகள் செய்த தமிழக அரசு பதவி விலக வேண்டும் என்று வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து வேல்முருகன் தனது அறிக்கையில் கூறுகையில் , சுற்றுச்சூழல் சட்ட விதிகளுக்குப் புறம்பாக இயங்கி, நாசகார விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர (காப்பர்) உருக்காலை! வேதாந்தா லிமிடெட் கார்ப்பொரேட் நிறுவனமான இதன் தலைமையகம் லண்டனில் உள்ளது. ஆனால் இதன் தலைவர் அனில் அகர்வால், இந்தியர்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட்டின் 61.7 விழுக்காடு பங்குகள் வேதாந்தா குழுமத்தின் அங்கமான வால்கேன் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தினுடையதாகும். மேலும் ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ், ஸ்டெர்லைட் எனர்ஜி, கோன்கோலா காப்பர் மைன்ஸ், காப்பர் மைன்ஸ் ஆஃப் தாஸ்மானியா, இந்துஸ்தான் ஜிங்க், வேதாந்தா அலுமினியம், மெட்ராஸ் அனுமினியம் கம்பெனி, வேதாந்தா அயர்ன் ஆகிய நிறுவனங்களும் அனில் அகர்வாலின் வேதாந்தா குழுமத்தைச் சேர்ந்தவையே.

    35 சதவீதம்

    35 சதவீதம்

    இவ்வளவு பெரிய கார்ப்பொரேட் மோடிக்கு நெருக்கமில்லாமல் எப்படி? பல மாநிலங்கள் பலமாக எதிர்க்க, அதனால் இறுதியாக 1994ல் தூத்துக்குடிக்கு வந்தது ஸ்டெர்லைட் காப்பர். ஆண்டுக்கு 4 லட்சம் டன் காப்பர் கேத்தோட் உற்பத்தி செய்கிறது. இதில் இந்தியச் சந்தைக்கு 35 விழுக்காடு போக மீதியை வளைகுடா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

    மார்ச் 27-இல் ஆலை மூடல்

    மார்ச் 27-இல் ஆலை மூடல்

    உற்பத்தியை 8 லட்சம் டன்னாக உயர்த்த 2ஆவது அலகு விரிவாக்கப் பணியைத் தொடங்கிய நிலையில் எதிர்ப்பு ஏற்பட்டு போராட்டம் வெடித்தது. அதனால் பராமரிப்பு பணிகளுக்காக 15 நாட்கள் ஆலையை மூடுவதாக அறிவித்து, கடந்த மார்ச் 27ந் தேதி ஆலையை மூடியது. ஆனால் இதுவரை ஆலை திறக்கப்படவில்லை.

    ஜூன் 6-இல் நடக்கிறது

    ஜூன் 6-இல் நடக்கிறது

    ஏப்ரலில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், "சுற்றுச்சூழல் சட்டங்களை ஏற்று நடக்கவில்லை; ஸ்டெர்லைட் கழிவுகள் ஆற்றில் கொட்டப்படுகின்றன; ஆலைப் பக்கமுள்ள நிலத்தடி நீர் குறித்த ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கவில்லை" என்று குற்றஞ்சாட்டி, ஆலையின் உரிமத்தை ரத்து செய்தது. ஆனால் நிறுவனம் மேல்முறையீடு செய்து விசாரணை ஜூன் 6ந் தேதி நடக்க இருக்கிறது.

    ஆலைக்கு சாதகமாய்

    ஆலைக்கு சாதகமாய்

    2013ல் தேசிய பசுமை தீர்ப்பாயமும் இதுபோல் குற்றஞ்சாட்டி சில வாரங்களுக்கு ஆலை மூடப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, NEERI அமைப்பின் விதிகள், IFC அமைப்பு குறிப்பிடும் தரம் என இவற்றை ஆலை முறையாகப் பின்பற்றுகிறது என்கிறார் ஸ்டெர்லைட்டின் தலைவர் பி.ராம்நாத். ஆனால் இவை மூன்றும் மத்திய அமைப்புகள்; ஆலைக்குச் சாதகமாய் இராமல் எப்படி?

    ஆலை மூட உத்தரவு

    ஆலை மூட உத்தரவு

    2005ல் இதே வேதாந்தா, ஒடிசாவில் பாக்சைட் ஆலை நிறுவ, அப்பகுதியில் வாழ்ந்த மலைவாழ் மக்களைத் துரத்தியடித்தது. ஆனால் அங்கு ஆலை அமைக்கத் தடை விதித்தது உச்ச நீதிமன்றம். ஜாம்பியா நாட்டிலும் வேதாந்தாவின் ஆலை இருந்தது. அது தாமிரக் கழிவுகளை ஆற்றில் கொட்ட, அதை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் இறங்க, ஜாம்பியா நீதிமன்றம் ஆலை மூட உத்தரவிட்டது.

    100-ஆவது நாளில்

    100-ஆவது நாளில்

    இப்படி விதிமீறல்களையே செய்த, செய்யும் நிறுவனம் இந்த வேதாந்தா. இதனால் மண்ணின் வளத்திற்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரிய அளவுக்குக் கேடு செய்கிறது இந்த நாசகார ஸ்டெர்லைட் காப்பர் ஆலை! அதனால்தான் 3 மாதங்களுக்கு மேல் தொடர்ந்து போராடி 100ஆவது நாளில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கத் தீர்மானித்தனர் தூத்துக்குடி மக்கள்.

    அதிக காவல் படை

    அதிக காவல் படை

    ஆனால் டெல்லியிலோ, இத்தோடு இந்தப் போராட்டத்திற்கே முடிவு கட்டத் தீர்மானித்தனர். காவல்துறையின் வேலை போராட்டத்திற்கு பாதுகாப்பு கொடுப்பதுதான். ஆனால் 99 நாட்கள் நடந்த போராட்டத்தை 100ஆவது நாளில் தடை செய்து 144 போட்டார்கள். விருதுநகர், மதுரை மாவட்டங்களிலிருந்து மேலும் அதிகமான காவல் படையினரை வரவழைத்தார்கள்.

    தடியடி

    தடியடி

    போராட்டக்காரர்களை ஆட்சியர் அலுவலகம் செல்லவிடாமல் தடுப்பதுபோல் நடித்து தடியடி நடத்தி கலவரத்தை உண்டுபண்ணினார்கள். கூட்டத்தினரைக் கலைக்க முதலில் தண்ணீரைப் பீய்ச்சியடிப்பார்கள்; அதற்குக் கட்டுப்படவில்லையென்றால் கண்ணீர்ப்புகையடிப்பார்கள்; அடுத்த கட்டம் ரப்பர் குண்டுகளைத்தான் அடிப்பார்கள்; அதற்குப் பிறகும்கூட தடியடி நடத்தமாட்டார்கள்; எச்சரிக்கைதான் விடுப்பார்கள்.

    நினைவுக்கு வராமல் இல்லை

    நினைவுக்கு வராமல் இல்லை

    ஆனால் காவல்துறையினர் இவற்றில் எதையுமே செய்யவில்லை: எடுத்த எடுப்பிலேயே தடியடி நடத்தி நூற்றுக்கணக்கானோரின் மண்டையை உடைத்தார்கள்.
    பிறகு போராட்டக்காரர்கள் வாகனங்களுக்குத் தீ வைத்தார்கள் என்கிறார்கள்; ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது காவலர்களே ஆட்டோவுக்குத் தீ வைத்ததை தமிழகமே தொலைக்காட்சியில் பார்த்தது நினைவுக்கு வராமல் இல்லை!

    உண்மை

    உண்மை

    போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்கியதால் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்க்க முடியவில்லை என்று முதல்வரும் சொல்லும் நிலை உருவாக்கப்பட்டது என்பதற்கு போராட்டக்காரர்கள் 30,000 பேரும் அங்கிருந்த செய்தியாளர்களும் நிகழ்வை ஒளிபரப்பிய தொலைக்காட்சிகளுமே சாட்சி! அதேநேரம் தமிழ்மண்ணின் உப்பைத் தின்னும் எல்லாத் தொலைக்காட்சிகளுமே இதில் உண்மையுடன் நடந்துகொண்டதாகக் கூறிவிட முடியாது.

    வானத்தை நோக்கி

    வானத்தை நோக்கி

    துப்பாக்கிச் சூடு, கூட்டத்தைக் கலைக்க என்றால் வானத்தை நோக்கித்தான் சுடுவார்கள். ஆனால் எதிரியைச் சுடுவது போல் அல்லவா தம் அண்ணன் தம்பி அக்கா தங்கை போன்ற சகோதர சகோதரிகளைக் குறி பார்த்துச் சுட்டார்கள்.
    வேனில் ஏறி படுத்துக்கொண்டு பாகிஸ்தான் ராணுவத்தைக் குறி வைப்பது போன்ற காட்சியையும் அல்லவா பார்த்தோம்.

    காவலரோடு வாக்குவாதம்

    காவலரோடு வாக்குவாதம்

    இதுவரை 14 பேரை சுட்டுத்தள்ளியிருக்கிறார்கள். எல்லோருக்கும் மார்பில்தான் குண்டு பாய்ந்திருந்தது. அதற்கு காவல்துறை பயன்படுத்தாத நவீன ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். காவலரோடு வாக்குவாதம் செய்த பள்ளி மாணவியை வாயிலேயே சுட்டுக் கொன்றார்கள்.

    300-க்கும் மேற்பட்டோர் மாயம்

    300-க்கும் மேற்பட்டோர் மாயம்

    ஒருவர் பாக்கியில்லாமல் தமிழகமே அதிர்ச்சியில் உறைந்தது; கண்டனக் குரலை ஒலித்தது. ஆனால் எதனையும் கண்டுகொள்ளவில்லை; மறுநாளும் 22 வயது தம்பியை போட்டுத்தள்ளினார்கள். அதோடு விட்டார்களா? தூத்துக்குடியில் வீதி வீதியாகச் சென்று வீட்டிலிருப்போரை பிடித்துக்கொண்டு சென்றார்கள். 300க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்று மக்கள் கதறுகிறார்கள். இது இலங்கையில் வெள்ளை வேனில் தமிழ் இளைஞர்களை சிங்கள ராணுவம் பிடித்துச் சென்றதை நினைவுபடுத்துகிறது.

    துணை ராணுவம்

    துணை ராணுவம்

    மேலும் ஒட்டுமொத்தமாக தென்பாண்டி மக்களையே ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற நோக்கில்தான் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இணைய சேவையை முடக்கியிருக்கிறார்கள். இவ்வளவும் செய்துவிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் துணை ராணுவத்தை தூத்துக்குடிக்கு அனுப்பவா என்று கேட்கிறது. அதையும் தலைமைச் செயலரிடம்தான் கேட்கிறது; முதல்வரிடம் அல்ல. ஆக தமிழ்நாட்டை ஆளுபவர்கள் தலைமைச் செயலர் மற்றும் துறைச் செயலர்கள்தான்! அதற்காகத்தானே ஆர்எஸ்எஸ் ஆளுநர் அனுப்பப்பட்டார்! முதல்வர் மற்றும் அமைச்சர்கள் என்பது பேருக்குத்தான்! அப்படியென்றால், மத்திய மோடி அரசின் திட்டப்படிதான் ஸ்டெர்லைட் படுகொலைகள் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன!

    பண்பாட்டு பேரவை

    பண்பாட்டு பேரவை

    இவ்வளவு தூரம் ஆனபிறகு முதல்வராக நீடிப்பது (நடிப்பது) ஏன்? உடனே பதவி விலகுக! அப்பாவி மக்களை படுகொலை செய்த காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிந்து கூண்டில் ஏற்றுக! இந்தப் படுகொலைகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணை ஆணையத்தை அறிவிக்கிறார்கள்; இது இன்னும் கொடுமையானது. நீதியை குழிதோண்டிப் புதைக்கும் நோக்கிலானது. எனவே பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்திடுக! தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு, தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை, அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்துகிறோம்!

    3 மணிக்கு ஆர்ப்பாட்டம்

    3 மணிக்கு ஆர்ப்பாட்டம்

    இதற்காக, இன்று (24-05-2018 வியாழன்) மாலை 3 மணியளவில் சென்னை சேப்பாக்கத்திலிருந்து பேரணியாகச் சென்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம்! தமிழக மக்களே! திட்டமிட்டு நம்மை அழிப்பவரை எதிர்க்க ஒன்றுசேருவோம்! போராடுவோம்!! இவ்வாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Tamilaga Vazhvurimai Party's Chief Velmurugan demands to dissolve the Tamilnadu government for Tuticorin gun shot incident.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X