இலவசங்களை இனிப்பு மிட்டாய் போலத் தருகிறார்கள்.. வெங்கையா பாய்ச்சல்
நெல்லை: ஊழலால் தமிழகம் பின்னோக்கி போய் விட்டது. இங்கு ஆட்சிக்கு வருபவர்கள் இலவசங்களை இனிப்பு மிட்டாய் போலத் தருகிறார்கள் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு காட்டமாக தெரிவித்தார்.
பாஜக சார்பில் தேர்தல் பிரச்சார பொது கூட்டம் நெல்லையில் நடந்தது. நெல்லை தொகுதி வேட்பாளர் மகாராஜன், ராதாபுரம் தொகுதி வேட்பாளர் கனி அமுதா ஆகியோரை அறிமுகப்படுத்தி மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேசியதாவது:

பட்டிமன்றம் போல் ஆரோக்கிய விவதாம் நடப்பதற்கு பதிலாக எதிர்கட்சிகளால் நாடாளுமன்றம் முடக்கப்படுகிறது. அனைத்து துறைகளிலும் ஊழலால் தமிழகம் பின் தங்கிவிட்டது. பலமுறை ஆட்சி மாற்றம் நடந்த பின்னரும் தமிழகத்தில் மின்வெட்டு, ஏழ்மை ஓழியவில்லை. தரமான கிராம சாலைகள் இல்லை.
தேவையான டாக்டர்களோ மருந்துகளோ இல்லை. ஏழைகளுக்கு நல்ல வசிப்பிடம் இல்லை. தேர்தல் வந்தால் தமிழகத்தில் இலவசங்களை இனிப்பு மிட்டாய் போல் வழங்கி ஏமாற்றுகின்றனர். இலவச திட்டங்கள் நிரந்தரமானவை அல்ல.
மோடி அறிவித்த கங்கை-காவேரி உள்ளிட்ட இணைப்பு திட்டங்களே நிரந்தரமானவை. இது போல் ராதாபுரத்துக்கு தாமிரபணியில் இருந்து வெள்ள நீர் வடிகால் திட்டமும், மானூர் பளளமடை குளத்திற்கு தாமிரபரணி நீரை கொண்டு செல்லும் திட்டமும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முழுமையாக செயல்படுத்தப்படும்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் இரண்டு கோடி ஏழைகள் இலவச கேஸ் சிலிண்டர் பெறுவர். 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா முழுவதும் மின்வெட்டு இருக்காது என்றார் வெங்கையா.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications