அரண்டு போன ஆம்பூர் பஸ் ஸ்டாண்ட்.. இளம் பெண்ணும் இளைஞரும்.. நடுரோட்டில் செய்யுற காரியமா இது!
ஆம்பூர் பேருந்து நிலையத்தில் இளம் பெண் ஒருவருக்கு இளைஞர் ஒருவர், தாலி கட்டிய வீடியோ வெளியாகி உள்ளது.
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் இளம் பெண் ஒருவருக்கு இளைஞர் ஒருவர், தாலி கட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருமணம் என்பது பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு, உற்றார் உறவினர் கூடி நல்ல நாளில், நடக்கும் நிகழ்வு. உறவினர்கள் ஆசிர்வாதத்தடன், நண்பர்களின் வாழ்த்துக்களுடன் நடக்கும் திருமணம் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு. திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு முறைதான்.. ஒரு சிலருக்கு மட்டுமே துரதிர்ஷ்டவசமாக இரண்டாவது முறையாக அமையும்.
ஆனால் பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் சர்வ சாதாரணமாக ஒரு திருமணம் நடந்திருக்கிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ள பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பேருந்து நிலையம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் மார்ச் 14ம் தேதி இரவு சுமார் 8.20 மணியளவில் பயணிகள் கூட்டம் சுமாராக இருந்தது. வழக்கமான பரபரப்போடு காணப்பட்ட பேருந்து நிலையத்தில் வியாபாரிகள் வியாபாரத்தை பார்த்து கொண்டிருந்தனர்.

இளைஞர்
இரவு நேரம் தொடங்கிவிட்டதால் சில கடைகள் மூடப்பட்டும் வந்தன. பேருந்துகளை பிடித்து ஊருக்கும் போய்விட வேண்டும் என்ற வேட்கையுடன் பயணிகள் பலர் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தனர். அப்போது சுடிதார் அணிந்து வந்த ஒரு இளம்பெண் மற்றும் ஒரு இளைஞர் என இரண்டு பேர் செய்வதறியாது அங்கும் இங்குமாக சுற்றி திரிந்தார்கள். சிறிது நேரம் தனிமையில் பேசிய அவர்கள் ஒரு பஸ்சின் பின்னால் யாரும் இல்லாத இடத்தை தேர்வு செய்து அங்கு சென்றார்கள்.

திடீரென மணப்பெண்
அப்போது அந்த இளைஞர் திடீரென்று ஒரு தாலி கயிற்றை எடுத்து அக்கம்பக்கம் யாரும் பார்க்கிறார்களா என்று பார்த்தபடி இளம்பெண்ணின் கழுத்தில் கட்டினார். அந்த இளம்பெண்ணும் தாலியை சர்வ சாதாரணமாக சரிசெய்து விட்டு அந்த வாலிபருடன் நடந்து சென்றார். இருவரும் அங்கிருந்து எதுவும் நடக்காததுபோல் சர்வசாதாரணமாக நடந்து சென்று விட்டனர்.

வீடியோ வெளியானது
இதனைக் கண்ட பயணிகள் சிலர் அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்த சிலர் தங்களது செல்போன்களில் அவர்களுக்கே தெரியாமல் வீடியோ எடுத்தார்கள். இந்த வீடியோவை கண்ட ஆம்பூர் டவுன் போலீசார் அங்கு வந்து தாலி கட்டிய வாலிபர் மற்றும் அந்த இளம்பெண்ணை தேடினார்கள். ஆனால் அவர்கள் அங்கு இல்லாததால் போலீசார் திரும்பி சென்றார்கள்.

பள்ளி சீருடை
பேருந்து நிலையத்தில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டவர்கள் வீட்டை விட்டு ஓடி வந்த காதல் ஜோடியாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அவர்கள் யார் எனபது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்தாண்டு கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பஸ் ஸ்டாண்டில் பள்ளி சீருடையில் இருந்த மாணவிக்கு நபர் ஒருவர் தாலி கட்டிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது ஆம்பூரிலும் அதேபோன்ற சம்பவம் அரங்கேறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications