For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஜயகாந்த் போட்டி ? உளுந்தூர்பேட்டையை திமுகவிடம் விட்டுக் கொடுத்தது மமக !

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: உளுந்தூர்பேட்டை தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிட முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால்தான் மனித நேய மக்கள் கட்சியிடமிருந்து அந்த தொகுதியை திமுக திரும்பப் பெறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி இடம் பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு ராமநாதபுரம், ஆம்பூர், நாகை, தொண்டாமுத்தூர், உளுந்தூர்பேட்டை ஆகிய 5 தொகுதிகளை ஒதுக்கியது திமுக. ஆனால், உளுந்தூர்பேட்டை தொகுதி மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கியதற்கு திமுக தொண்டர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

vijayakanth contest ulundurpet constituency ?

மேலும் விழுப்புரம் மாவட்டச் செயலாளரான பொன்முடிதான், தனது சுயநலத்திற்காக இந்தத் தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு விட்டுக்கொடுத்துவிட்டார் என்று சொல்லி, திமுகவினர் போராட்டத்தில் குதித்தனர். மேலும் பொன்முடியின் உருவப் பொம்மையையும் தீ வைத்து எரித்தனர்.

இந்நிலையில், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா இன்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜவாஹிருல்லா, நாங்கள் ராமநாதபுரம், நாகை, ஆம்பூர், தொண்டாமுத்தூர் ஆகிய நான்கு தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறோம். உளுந்தூர்பேட்டைத் தொகுதியை மீண்டும் தி.மு.க.விற்கே வழங்கி விட்டோம் என்று தெரிவித்தார். ஆனால் அதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே தி.மு.க தலைமை, உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு திருநாவலூர் ஒன்றிய செயலாளர் மற்றும் ஒன்றியத் துணைச்சேர்மன் ஜி.ஆர்.வசந்தவேலுவை வேட்பாளராக அறிவித்தது.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டியிட முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதனால் அவரை வீழ்த்த வேண்டுமானால் வலிமையான வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்பதால் ஜவாஹிருல்லாவிடம் அந்த தொகுதியை கேட்டிருக்கிறது திமுக தலைமை. அதற்கு ஜவாஹிருல்லா ஓகே சொல்லிவிட்டதால்தான் இந்த உடனடி மாற்றம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக திமுக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை 174 ஆக உயர்ந்துள்ளது.

English summary
DMDK vijayakanth contest ulundurpet constituency ?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X