For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

த்தூ விவகாரம்.. விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யாத போலீசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: பத்திரிகையாளர்களிடம் மோசமாக நடந்துகொண்டுவரும் எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்குமாறு, போலீசாருக்கு ஹைகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை ஹைகோர்ட்டில், ஜி.தேவராஜன் என்பவர் இதுகுறித்து ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது:

Vijayakanth issue: High court send notice to police

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், கடந்த டிசம்பர் 27ம் தேதி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு, ‘நீங்கள் ஜெயலலிதாவிடம் கேள்வி கேட்க முடியுமா?' என்று கூறி நிருபர்களை பார்த்து ‘தூ' என்று துப்பினார்.

இதேபோல டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போதும், அநாகரீகமாக செயல்பட்டார். எனவே, கடந்த 28ம் தேதி விஜயகாந்துக்கு எதிராக ‘ஆன்லைன்' மூலம் போலீசில் புகார் செய்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, என் புகாரின் அடிப்படையில் விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிடவேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனுவில், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டரை சேர்க்கவில்லை. எனவே, சம்பவம் நடந்த இடத்தில் அதிகார எல்லைக்கு உட்பட்ட போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டரை எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும். மனுவுக்கு சென்னை போலீஸ் கமிஷனர் பதிலளிக்கவேண்டும். விசாரணையை வருகிற 18ம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன் என்று உத்தரவிட்டுள்ளார்.

English summary
Chennai High court send notice to police to ask clarification for not registering case against Vijayakanth for his bad attitude against journalist.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X